நவகிரக தோஷங்களை நீக்கும் நவகிரக கணபதி

0 1,514

நவகிரக தோஷங்களை நீக்கும்

நவகிரக கணபதி

 விநாயகரின் நெற்றியில் சூரியன் இருக்கிறது. தலை உச்சியில்  குரு, அடி வயிற்றில் சந்திரன், வலது மேற்கையில் சனிபகவான், வலது கீழ்க்கையில் புதன், இடது மேற்கையில் ராகு, இடது கீழ்க்கையில் சுக்கிரன் என எல்லா கிரகங்களும் பிள்ளையாரிடம் இருக்கின்றன. தும்பிக்கையில் ஸ்வர்ண கலசம் ஏந்தி பக்தர்களின் நவகிரக தோஷங்களை நீக்குகிறார் விநாயகர். முறம் போன்ற காதுகளை அசைத்து பக்தர்களின் துன்பங்களை விரட்டுகிறார் என்கிறது ‘கணேச புராணத்தின் வக்ர  துண்ட கணபதி துதி.

 கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.

ஞாயிறு – சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம

திங்கள் – சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம

செவ்வாய் – அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம

புதன் – புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம

வியாழன் – குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம

வெள்ளி – சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம

சனி – சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம

ராகு – ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம

கேது – கேதுஸ்வரூப ஞான கணபதயே நம

 

எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்

 

“நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ

ஸ்வரூபகம் கணபதயே நம.”

 திருஞானசம்பந்தர் “சிவனிருக்க என்னை நாள் என் செய்யும் கோள் என் செய்யும்” என்று “கோளறு பதிகம்” பாடினார். அருணாகிரியார் முருகனையே வணங்கி, “நாள் என் செயும் எனை நாடிவந்த கோள் என் செயும்” என்று கந்தரலங்காரத்தில் கூறினார்.

 கணபதியே நவகிரக வடிவில் உள்ளார் என்றெண்ணி, அதற்குரிய துதிகளைச்சொல்லி வணங்கினால் இடையூறுகள் விலகுவது நிச்சயம். காரிய வெற்றியும் கைமேல் கிட்டும்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.