நவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்

0 1,245

நவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்

ஆலங்குடி    –   குரு வியாழன்
திங்களூர்     –    சந்திரன்
திருநாகேஸ்வரம்       –     ராகு
சூரியனார் கோயில்    –    சூரியன்
கஞ்சனூர்:சுக்கிரன்    –    வெள்ளி
வைதீஸ்வரன் கோயில்     –    செவ்வாய்
திருவெங்காடு     –     புதன்
கீழ் பெரும்பள்ளம்     –    கேது
திருநள்ளார்     –     சனீஸ்வரன்
navagra temple
 

சூரியன்:

 நவகிரகங்களில் முதன்மையானது சூரியன். இக்கிரகத்திற்குண்டான கோவில், கி.மு.1100 -ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் என்னும் மன்னனால், கோவில்களின் சொர்க்கபூமி கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், (தமிழ் தை மாதம் ஆரம்பம்) உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள்,  இந்த சூரியக்கடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப்படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக, வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப் படுகிறது. சூரிய பகவான் கிரகத்திற்கு சாயா மற்றும் சுவர்ச்சா என்னும் இரண்டு துணைவிகளுடன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் இந்த கிரக மணடலத்தில் பவனி வருகின்றார் என்று கொள்ளப்படுகின்றது. மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டு மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைவிடங்களாகக் கொண்டுள்ளன.                                                                                                                                                                    
ராகு :
 திருநாகேஸ்வரம், ராகு கிரகத்தின் புனித, பெரிய கோவில் கோவில்களின் புனித நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. புராண வரலாற்றில் இந்த ராகு பகவானின் இத்தலத்தில், ஆதிசேஷன், தக்ஷன் மற்றும் கார்கோடன் போன்ற நாகங்கள் சிவபெருமானை வழிபட்டுள்ளன என்றும், நலமஹாராஜா என்னும் மன்னனும் சிவனை இத்தலத்தில், திருநள்ளாரைப் போல வழிப்பட்டதாகவும் கூறப் படுகிறது.  இந்த ராகுவே ஒருவரின் ஆற்றலை வலிமை படுத்தவும் எதிரியை நண்பனாக மாற்றவும் முக்கிய காரணகர்த்தாவாக உள்ளார். இந்த ராகுவின் அதிதேவதை துர்காதேவி ஆகும். மூலநாதரின் பெயர் நாகேஸ்வரர் மற்றும் தேவியின் பெயர் கிரிகுஜாம்பிகை ஆவார். இத்தேவியை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார். இத்தலத்தில் ராகு தனது தேவியுடன் எழுதருளுகின்றார். ராகு காலத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது அதிசயக்க விதத்தில் நீலநிறமாக தோன்றுகின்றது. பொதுவாக ராகு தோஷமுள்ளவர்கள், இங்கு வந்து ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு தங்களின் தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.     

செவ்வாய் :                       

 கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் ‘மார்ஸ்’ (மார்ச்) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். ரோமானியர்களும் இவரைத் தங்களின் குருவாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமாதேவியின் மைந்தனாவார். இவ்விடம் புள்-இருக்கு-வேலூர் என்றும் அழைக்கப் படுகிறது. ஜடாயு என்னும் கழுகு சீதா தேவியை கடத்திச் செல்ல முயன்ற ராவணனை வீரத்துடன் தடுத்து எதிர்த்த பொழுது இராவணனால் சிறகுகள் வெட்டப்பட்டு, இத்தளத்தில் விழுந்திறந்து மோட்சகதி அடைந்ததாக இராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதும் நாம் இந்த ஜாடாயுவை தகனம் செய்த இடமான ஜடாயு குண்டத்தை நாம் காணலாம்.       
 
 இந்த வைதீஸ்வரன் கோவில் எப்பொழுதும் பக்தகோடிகள் நிரம்பி காணப் படுகின்றது. இங்கு அங்காரகன் என்னும் செவ்வாய் -உடன் வைத்தியநாத சுவாமி (சிவா) தனது துனைவி தையல் நாயகி என்கின்ற வலம்பிகையுடன் எழுந்தருளி தனதருளால் பக்த கோடிகளுக்கு ஆரோக்கியத்தினையும் வளமான வாழ்க்கையினையும் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருக கடவுளுக்கு கிருத்திகையில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாயன்மார்கள், அருணகிரிநாதர், குமரகுருபரர், காளமேக புலவர் ஆகியோர் இங்கு வந்து பல பாடல்களால் இத்தலத்தினையும் எழுத்தருளும் தெய்வங்களையும் வாழ்த்திப் பாடியுள்ளார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் கிரகத்திற்கு வேறு எங்கும் காணாத சிறப்பிடமாக இத்தலம் கருதப் படுகின்றது. 

சந்திரன் :                                      

  திங்களூர், என்றழைக்கப்படும் இந்த தலம் எப்போது, யாரால் அமையப் பெற்றது என்று ஐயப்பாடு இருந்தாலும், வரலாற்று ஆசிரியர்கள், பக்தி மார்க்க காலம் ஆகிய , கி.மூ.ஏழாம் நூற்றாண்டிற்கு  வெகுகாலம் முன்பே, ஆங்கிலத்தில் மூந் என்றும் சமஸ்கிருதத்தில் சந்திரன் என்றும் தமிழில் திங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கிரகத்துக்குரிய இத்தலம் அமைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றார்கள். நீண்ட ஆயுளையும் வசதியான வாழ்க்கையையும் பெற இக்கிரகத்தினை ஆராதிக்கின்றனர். ஜோதிடத்தில், இந்த சந்திரன் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களையும், துன்பங்களையும் போக்கக் கூடிய கிரகமாக கூறப்படுகிறது. தேவி பார்வதி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார்.  கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.                                                                                                                                            

சனி :

 திருநள்ளார், கோவில்களின் சொர்க்க பூமியான கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் ஸ்யாடர்ந் என்றும் தமிழில் சனீஸ்வரன் என்றும் அழைக்கப்படும், இக்கிரகத்திற்கு அமைந்துள்ள ஒரே கோவிலாகும் இத்தலம். தனது வான வெளி சஞ்சாரத்தின் பொழுது, இத்தளத்தின் மீது தனது அனைத்து ஆதிக்கத்தையும் கொண்டுள்ள, இந்த சனி கிரகத்தை, புராணக் கதைகளில் புகழ்பெற்ற நலமஹாராஜா இங்குள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, ஆராதித்து, தனது பெரும்துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்ததை அக்காவியம் குறிப்பிடுகிறது. இத்தளத்தில் உள்ள நளதீர்த்தம் என்னும் குளத்தில் குளித்து, சனி பகவானை ஆராதித்தால், சனி கிரகத்தால் ஏற்படும் எல்லா வித துரதிருஷ்டங்களும், துன்பங்களும் கழுவப்பட்டு, நிவர்த்தி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது. இந்த சனி கிரகம் ஒருவரின் ஜாதகத்தில், ஜனன காலத்திலும், சஞ்சார காலத்திலும் தனது இருப்பிடம் முகாந்திரமாக அந்த ஜாதகருக்கு துன்பங்களும், தொல்லைகளும், துயரங்களும் கொடுப்பவர் எனவும், அதேபோல் ஈடாக இவரை மனப்பூர்வமாக ஆராதிக்கும் பக்தர்களுக்கு நலம் பயக்கும் நல்லவராகவும் இருப்பார் என்றும் ஜோதிட குறிப்புக்கள் கூறுகின்றன. இந்த சனி கிரகத்தின் அதி தேவதை யமதர்மா ஆகும். நாச விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளையும் அதிசயிக்க வைக்கும் தகவல்களும் உண்டு. இத்தளத்தை கடக்கும் விண்வெளி கலங்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரையிலும் எந்த ஒரு சமிக்கையும் வழங்காமல் இருந்ததைக் கண்ட விஞ்ஞானிகள் அவ்விடம் இதுவென கண்டு பல ஆராய்ச்சிகளின் மத்தியில் ஒன்றும் அறியாமல் அதிசயப்பட்டுப் போனார்கள். இதனைப் பற்றிய குறிப்புக்களை தங்களின் பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்கள்.        
 
சுக்கிரன்:
  கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கஞ்சனூர், ஆங்கிலத்தில் வீனூஸ் என்றும் தமிழில் சுக்கிரன்(வெள்ளி) என்றும் அழைக்கப்படும் கிரகம் தொடர்புடைய மதுரை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகின்ற ஒரு சிவஸ்தலமாகும். இத்தலம் திருவாடுதுறை என்னும் அமைதியான கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது. இத்தலம் அக்னிஸ்தலம் என்றும், பிரம்மபுரி என்றும், பலாசவனம் என்றும் அழைக்கப் படுகிறது. சிவ  பார்வதி திருமண கோலத்தை பிரம்மன் இங்கு கண்டதாக ஐதீகம். தங்களின் துனைவிமார்களின் நலம் நாடி பக்தர்கள் இங்கு வருகின்றனர். சுக்ரா அல்லது வீனஸ் என்னும் இந்த கிரகம் நல்ல கல்வி அறிவுடன், வளமான சுகமான வாழ்க்கையையும், வம்சாவழியையும், நீண்ட ஆயுளையும், செல்வ சம்பத்துக்களையும் வழங்கக்கூடியவர் ஆவார். இக்கிரகத்தின் அதி தேவதை மகாலட்சுமி ஆவார்.  
 
கேது :   
  கீழ்பெரும்பள்ளம், கும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புராதன, வரலாறு கொண்ட சிவஸ்தலம் ஆகும். கேது என்னும் கிரகம் இக்கோவிலில் சிவனை வழிபாடு செய்து அமைந்துள்ளார். ராகுவும் கேதுவும் பாற்கடலில் கிடைத்த அமுதத்துடன் தொடர்புகொண்டு, சாபத்திற்கு ஆளாகி, சிவனை வழிபாட்டு, கிரக அந்தஸ்த்தையும், மனித தலையும் பாம்பின் உடலையும், பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, இத்துன்பங்களுக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழி கொள்ளும் நோக்கத்துடன் கிரக சஞ்சாரம் செய்வதாக ஜோதிடக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் பலனாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதாகவும் கூறப் படுகின்றன.  இத்தலத்தில் கேதுவுக்கு தனிக் கோவில் உண்டு. கேது என்னும் இக்கிரகம் தனது பக்தர்களுக்கு வளமான வாழ்க்கையையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ சம்பத்துக்களையும், கால்நடை போன்றவைகளையும் பொதுவாக அனைத்து நலன்களும் அளிப்பவர் என்று கூறப் படுகிறது. இக்கேதுவுக்கு அதி தேவதைகள் கணேசர் எனப்படும் விநாயகக் கடவுளும், இந்திரனும் ஆவார்கள்.   
                                                                                     
 குரு:   
  ஆலங்குடி,  கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி மூலவராகக் கொண்ட இத்தலத்தில் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படும் குரு(வியாழன்) என்னும் இந்த கிரகம், கற்றுளியால் சுவற்றில் புடைப்பு சிற்பமாகக் செதுக்கப்பட்டு, காணப்படுவது சிறப்பு அம்சமாகும். குருபெயர்ச்சி எனப்படும் காலகட்டத்தில் இந்த தலத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றனர் பக்தகோடிகள். பார்வதி தேவியானவள் இங்குள்ள அமிர்தபுஷ்கரணி கரையில் பிறந்து, பின், சிவனுடன் இணைந்ததாக ஐதீகம். நோய் நொடிகளில் இருந்து நிவாரணம் கொடுப்பதும், பூர்வ புண்ணிய பாவங்களில் இருந்து நலம் தருவதும், நீண்ட ஆயுள், வலிமை, ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல கல்வி வழங்குவதும் இக்குரு கிரகத்தின் ஆதிக்கமாகும். ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது         
 
புதன் :
  திருவெண்காடு, இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.  வால்மீகி ராமாயணத்தில் இதனைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆகையால் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகப் பழமை வாய்ந்ததாக கருதப் படுகிறது. நவக் கிரகங்களில் இறுதியாக கருதப்படுகின்ற புதன் என்றும் ஆங்கிலத்தில் மர்க்யுரீ என்றும் அழைக்கப் படும் இக்கிரகம் ஆற்றலையும் அறிவையும் கொடுக்கக் கூடிய கிரகமாக கருதப் படுகிறது. அதிமேதாவிதனத்தையும், அறிவுக் கூர்மையையும், செல்வ சம்பத்தையும் தனது பக்தர்களுக்கு வழங்குவதில் முதன்மை பெற்றது. இக்கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். சைவதிருமறைகளிலும், சாஸ்திரங்களிலும் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு. அனைத்து கர்ம காரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், மர்க்யுரீ என்று ஆங்கிலத்திலும் அழைக்கப் படும் இக்கிரகம் கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது.
Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.