இந்திராணி வழிபட்ட தலம் தருமபுரீசுவரர் திருக்கோயில்

0 428

இந்திராணி வழிபட்ட தலம் தருமபுரீசுவரர் திருக்கோயில்

 இந்திராணி பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர்.

  சப்தகன்னியரில் இந்திராணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன.

 பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது. சந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கி எண்ணிலடங்கா நற்பலன்களை பெற

 பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.

 சப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது. இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள். மயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.

 காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

இந்திராணி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) :

 இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் – ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் – சக்தியையும் – இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள்.

 ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் – எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் – பதவிகளை அடையலாம்

இந்திராணி காயத்ரி:

ஓம் – கஜத்வஜாயை வித்மஹே;

வஜ்ரஹஸ்தாயை தீமஹி;

தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

 ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;

ச சதுர்புஜ ஸமன் விதாம்;

ஸ ரத்ன மகுடோபேதாம், ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;

வராபயகராம், போஜாம், வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;

மாஹேந்த்ரீம் மாதரம், வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.