ஒவ்வொரு ரசிகளுக்கான கடவுளின் துதிகள்

7

விநாயகர் துதி (மேஷம்)

ஐந்து கரத்தனை யானை முகத்தனைmeasham

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியுள் வைத்தபடி போற்றுகின்றேனே.

 அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட

வித்தக விநாயக ! விரைகழல் சரணே !

            முருகன் துதி (ரிஷபம்)

பேர் ஆதரிக்கும் அடியவர்தம்

பிறப்பை ஒழித்து, பெருவாழ்வும்rishabam

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்

பெருமான் என்னும் பேராளா!

சேரா நிருதர் குல கலகா!

சேவற்கொடியாய் ! திருச்செந்தூர்த்

தேவா ! தேவர் சிறைமீட்ட

செல்வா ! என்று உன் திருமுகத்தைப்

பாரா, மகிழ்ந்து, முலைத் தாயர்

பரவிப் புகழ்ந்து, விருப்புடன், அப்பா !

வா, வா, என்று உன்னைப் போற்றப்

பரிந்து, மகிழ்ந்து, வர அழைத்தால்

வாராது இருக்க வழக்கு உண்டோ !

வடிவேல் முருகா ! வருகவே !

வளரும் களபக் குரும்பை முலை

வள்ளி கணவா ! வருகவே !

    பெருமாள் துதி (மிதுனம்)

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்methunam

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

             நரசிம்மர் துதி (கடகம்)

அண்ட சராசரங்களில் நிறைந்த சிம்மன்

அகிலமும் தானாகி அறிவு தந்த சிம்மன்kadagam

தொண்டரின் தூதாகி துணை வந்த சிம்மன்

துஷ்ட நிக்ர சிஷ்ட பரிபாலன சிம்மன்

மீனாகி வந்து சதுர்வேதம் காத்த சிம்மன்

ஆமையாய் மிதந்து மலை தாங்கி நின்ற சிம்மன்

வராகமாய் பூதேவியை ரக்ஷித்த சிம்மன்

பிரகலாத ஆழ்வானின் பிரசன்ன சிம்மன் !

அனுமன் துதி (சிம்மம்)

விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்

உறைவார் முடிவே உணரா முதலோன்simam

கரைவார் நிறைவே கருதாதவன் போல்

உறைவான் மறையாய் ஒரு நீதியனே !

கண்டேன் ஒரு சீதையையே

கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான்

வென்றேன் எனவே விழைந்தானையே நான்

கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே !

சரமே தொளையா சகமே மறவா

சரீரா அனுமா ஜமதக் கினிநீ

உரமே உறவே உறவோய் பெரியோய்

உயர்வே அருள்வாய் திருமாருதியே !

கோவிந்தன் துதி (கன்னி)

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ,

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்,kani

தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்

மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே,

நெடியானே ! வேங்கடவா ! நின்கோயி லின்வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே !

ராகவேந்திரர் துதி (துலாம்)

நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்

நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்thula

பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்

பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்

கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்

காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்

வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்

மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !

சிவ துதி (விருச்சிகம்)

நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்

நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்viruchagam

ஊருளான் எனதுரை தனதுரையாக

ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்

பாருளார் பாடலோ டாடல் அறாத

பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்

ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்

செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !

துர்க்கை துதி (தனுசு)dhanusu

இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,

விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,

திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,

அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே !

 

துர்க்கை துதி (மகரம்)

சேவித் தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்

வச்சிரக் கிரீடம் கண்டேன் வைடூரிய மேனி கண்டேன்

முத்துக்கொண்டைகண்டேன்முழுப் பச்சை மாலை கண்டேன்.

சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்

பின்னலழகு கண்டேன் பிறைபோல நெற்றி கண்டேன்

சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்magaram

கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்

மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்

கைவளையல் கலகலென்ன கணையாழி மின்னக் கண்டேன்

அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா

வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா

தாயாரே உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

மாதாவே யுன்றன் மலரடியில் நான் பணிந்தேன் !

சிவன் துதி (கும்பம்)

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றிkumbam

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

ஸ்ரீரங்கநாதர் துதி (மீனம்)

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !meenamm

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்

ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at :[email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.