பாண்டவர்களின் தாகம் தீர்த்த கல்கி பகவதி அம்மன்!

0 237

    முற்காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது இந்த பகுதியில் எங்கும் வறட்சி ஏற்பட்டு குடிக்க நீர் இன்றி தவித்த போது கல்கி பகவதி அம்மன் தன் இரு குமாரர்களுடன் குறத்தி வடிவில் வந்து இங்குள்ள தீர்த்தத்தை பாண்டவர்களுக்கு அருளி மறைந்ததாகவும் பாண்டவர்கள் அம்மன் தீர்த்தம் பருகி தாகம் தீர்த்ததாகவும் ஓரு வரலாறு கூறுகிறது.வேலூர் நகரம் பல வரலாற்றுச் சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக வேலூர் கோட்டை கட்டட கலைகளுக்கும், இந்திய சுதந்திர வரலாற்றுக்கும் பெயர் பெற்ற ஊராகும். இவற்றுக்கு அடுத்ததாக வரலாற்று சிறப்புமிக்க ஒம் கல்கி பகவதி அம்மன் ஆலயம், வேலூர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதை இங்குள்ள கல்வெட்டு செய்தி நமக்கு தெரிய வருகிறது.

தலவரலாறு:-

  இக்கல்வெட்டு இராட்டிரகூட மன்னன் (மூன்றாம் கிருஷ்ணன்) கன்னரதேவன் இவனது 26-வது ஆட்சியாண்டில் (கி.பி.965) பொறிக்கப்பட்டதாகும். படுவூர்க் கோட்டத்தை சேர்ந்த பங்கள நாட்டில் வட பகுதியில் உள்ள வேலூர் பாடி எனும் இந்த ஊரை, இந்த மலை மீதுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு தானமாக சந்திரன், சூரியன் உள்ளவரை கொடுத்தான் நுளம்பன் திரிபுவன வீரனாகியவன். அந்நாளில் வேலூர்பாடி என்பதே மருவி வேலப்பாடி என்றானது. இந்த மலைக்கு கீழ் உள்ள பகுதி வேலப்பாடி ஆகும். விஜயநகர அரசர்கள் காலத்தில் வேலூர்பாடி  என்பதை சுருக்கி வேலூர் என்றும் அழைக்கலாயினர். பின்னாளில் ராயர்கள் என்ற பரம்பரை என்ற பரம்பரை ஆட்சி செய்ததால் ராயவேலூர் என்றும் அழைத்து வந்தனர்.வேலூர் நகரின் பழமைக்கு இந்த கல்வெட்டு சான்றே முதன்மையாக உள்ளது. இந்த மலையை காலந்தொட்டே பகவதி மலை என்று அழைத்து வருகின்றனர். இந்த பழமையான கோயிலில் 2001-ம் ஆண்டு முதல் ஆம் கல்கி பகவதி அம்மன் பிரதிஷ்டை செய்து வருகின்றார்.

    இங்கு ஒம் கல்கி பகவதி அம்மன் லிங்க உருவத்தின் மத்தியில் அமர்ந்து காட்சி தருகிறாள். வலப்புறம் ஸ்ரீவிநாயகரும், இடப்புறம் ஸ்ரீமுருகரும் நின்ற நிலையில் காட்சி தருகின்றனர். இவர்களுக்கு முன்பாக ஸ்ரீமுகலிங்கம் அமைப்பில் முகம் உள்ள சிவனாக காட்சி தருகிறார் ஈஸ்வரர். இந்த அமைப்பு தென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வடிவம் ஆகும். பகவதி அம்மனின் கடைசி அவதாரமாக ஒம் கல்கி பகவதி அம்மன் என குறிப்பிடப்படுகிறது.

 இந்த மலையில் அழகிய பாறைக்குள் இயற்கையில் உருவாகி உள்ளன. மலைமீது மக்கள் தாகம் தீர்க்கும் அம்மன் தீர்த்தம் வற்றாத சுனை உள்ளது.மன்னர்கள் வணங்கி வழிபட்ட, அம்மன் பாதம், பாறை விநாயகர், ராஜநந்தி இவற்றை மக்கள் வணங்கி அருள்பெறுகின்றனர். இயற்கையில் மலையே அழகாக அமைந்துள்ளது.  அங்கிருந்து பார்த்தால் வேலூர் அழகாக தெரியும். மலையேறி செல்ல பழங்கால படிக்கட்டுகள் உள்ளன. ஞாயிற்றுகிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

kaliyamman

   முன்னொரு காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் வந்த போது இந்த பகுதியில் எங்கும் வரட்சி ஏற்பட்டு குடிக்க நீர் இன்றி தவித்த போது பகவதி அம்மன் தன் இரு குமாரர்களுடன் குறத்தி வடிவில் வந்து இங்குள்ள தீர்த்தத்தை பாண்டவர்களுக்கு அருளி மறைந்ததாகவும் பாண்டவர்கள் அம்மன் தீர்த்தம் பருகி தாகம் தீர்த்ததாகவும் செய்தியாக தெரிவிக்கின்றனர். இன்றும் இந்த தீர்த்தமே வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கிறது. இங்கு கோயிலில் குடும்பத்துடன் இறைவன் காட்சி அளிப்பதால் இங்குவரும் பக்தர்களும் குடும்பத்துடன் வணங்கி அம்மன் அருள் பெறுகின்றனர்.இங்கு தலமரம் கிடையாது. அதற்கு பதிலாக பச்சை கொடி எனப்படும் (ஓணான் கொடி) மக்கள் தன் உடலில் சுற்றிவந்து வணங்குகின்றனர்.

நகை வைத்து படைத்தால் நகைகள் அதிகரிக்கும்:-

  இந்த அம்மனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். குடும்பம் செழிக்கும். செல்வம் பெறுகும். இங்குள்ள நந்தி அதிக நகைகளை அணிந்துள்ளதால் இந்த கோயிலில் நகைகளை வைத்து வணங்கி எடுத்துச் சென்றால் அதிக நகைகள் சேரும் என்பது ஐதீகம். திருமணத்திற்கு வாங்கும் புதிய தாலியும் நகைகளும் ஆடைகளும் இங்கு வைத்து பூஜை செய்து பிறகு வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அண்ணன் திருமாலின் கடைசி அவதாரமான கல்கி அவதார சக்தியும், கணவர் ஈசனின் சக்தியும் சேர்ந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஒம் கல்கி பகவதி அம்மனை வணங்கி மக்கள் வழிபடுகின்றனர்.வேலூர் நகரம் இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்:                                                                                                                                                                         வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் இத்தலம் உள்ளது. எங்கிருந்தும் பஸ்வசதி உண்டு.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.