பாவ வினைகள் தீர்ந்து புண்ணியம் பெருகும் சிவ நாமம்

0 9

 பிரதோஷபாட்டு சிவாய நம ஓம் சிவாய நமஹ! சிவாய நம ஓம் நமச்சிவாய!என்று  சிவபெருமானை புகழ்ந்து போற்றி பாடி நம் பழவினைகள் தீர்ந்து புண்ணியங்கள் பெறுவோம். சிவாயநம திருச்சிற்றம்பலம்

சிவாய நம ஓம் சிவாய நமஹ!
சிவாய நம ஓம் நமச்சிவாய!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழை பொறுப்பாயே!
அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!
சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தருக்கு தந்தையானாய் சொக்கேசா!
மண் சுமந்து கூலி கொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய் சொக்கேசா!
தோடுடைய செவியோனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!
நரியை பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!
மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!
கால கால காசிநாதா பாஹிமாம்!
விசாலாட்சி சகித விஸ்வநாத ரக்க்ஷமாம்!
ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!
என்னைப் பனல்லவா என் தாயுமல்லவா!
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா!
சிவாயநம திருச்சிற்றம்பலம்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.