பன்னிரண்டு ராசிக்காரர்களின் தோஷம் நீங்க பைரவரை வணங்கும் முறை

42

 கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார்.கடவுளை வழிபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றுதான் வழிபடுகிறார்கள். வெகு சிலரே வீடு பேறாகிய முக்தி வேண்டும் என்று கடவுளை உருகி, உருகி நினைப்பதுண்டு.

 பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் “பைரவர் வழிபாடு கைமேல் பலன்” என்ற பழமொழி ஏற்பட்டது.

“பைரவா….” என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர்.எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார்.

 கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.

  அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்த சாதம், தேனில் ஊறவைத்த உளுந்து வடை மற்றும் வடையை மாலையாக சாற்றுதல் மற்றும் வெண் பூசணிக்காய் வெட்டி பலியிடுதல், எலுமிச்சை சாதம் படைத்தல் போன்றவைகள் ஸ்ரீபைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் ஆகும்.

 பால், இளநீர், தேன் இவற்றால் யந்திரத்தை அபிஷேகம் செய்து, பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்து சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து தினம் 1008 வீதம் ஜெபித்து பூஜிக்க வேண்டும். சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்ய வேண்டும். இது ஆயுஷ்ய யாகத்திற்கு நிகரான பலனைக் கொடுக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும். பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை ,ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

 நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும். வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

 செழிக்கும். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

 இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #bairavar

  Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.