அரிசி பொரி பிரசாதம் – புராணக் கதைகள்!

127

அரிசி பொரி பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் பெருமாள் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் பொரி நைவேத்தியம் பற்றிய புராணக் கதைகள் குறித்து பார்க்கப் போகிறோம். பொதுவாக சிவன் கோயிலாக இருந்தால் திருநீறும், அம்மன் கோயிலாக இருந்தால் குங்குமமும், மஞ்சளும் பிரசாதமாக கொடுப்பார்கள். மேலும், ஒரு சில கோயில்களில் அப்பம், அரவணை, நெய், லட்டு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை பிரசாதமாகவும் கொடுப்பார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைப்பாக்கம் என்ற ஊரில் பழமையான திரிபுராந்தகன் கோயிலும், பெருமாள் கோயிலும் உள்ளது. விஜயநகர மன்னர் அச்சுத தேவராயரால் இந்த பெருமாள் கோயில் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இந்தக் கோயிலில் மூலவராக இருந்த பெருமாளுக்கு அரிசிப் பொரியை வைத்து அபிஷேகம் செய்ததோடு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அதனால், அந்த இறைவன் பொரி வரதர் என்றும் அழைக்கப்படுகிறார்.