ஆதிரத்தினேஸ்வரர் மண் உருண்டை பிரசாதம் – புராணக் கதைகள்!

84

ஆதிரத்தினேஸ்வரர் மண் உருண்டை பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் மண் உருண்டைப் பற்றிய புராணக் கதைகள் குறித்து பார்க்கப் போகிறோம். பொதுவாக சிவன் கோயிலாக இருந்தால் திருநீறும், அம்மன் கோயிலாக இருந்தால் குங்குமமும், மஞ்சளும் பிரசாதமாக கொடுப்பார்கள். மேலும், ஒரு சில கோயில்களில் அப்பம், அரவணை, நெய், லட்டு, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை பிரசாதமாகவும் கொடுப்பார்கள்.

ஆனால், கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக மண் சார்ந்த உருண்டையை பிரசாதமாக கொடுக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை என்ற ஊரில் உள்ள கோயில் ஆதிரத்தினேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஆதிரத்தினேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண்சாந்தை உருண்டையாக உருட்டி தருகின்றனர். இதனை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால் கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.