கஷாயம் பிரசாதம் – புராணக் கதைகள்!

132

கஷாயம் பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் மூகாம்பிகை கோயிலில் கொடுக்கப்படும் கஷாயம் பிரசாதம் குறித்து பார்ப்போம். கர்நாடகா மாநிலம் கொல்லூர் என்ற பகுதியில் உள்ள கோயில் தான் மூகாம்பிகை அம்மன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக மூகாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது எழுந்திருக்க முயற்சித்த போது அவரால் எழ முடியவில்லை.

இதன் காரணமாக அவருக்கு அம்பிகை கஷாயம் தயாரித்து கொடுத்த தாக புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து, அன்று முதல் மூகாம்பிகை அம்மன் கோயிலில் இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக கொடுக்கும் பழக்கும் வந்துள்ளது. இந்த கஷாயம் சாப்பிடுவதன் மூலமாக சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.