குருசாமிபாளையம் சிவசுப்ரமணியசுவாமி கோயில் – புராணக் கதைகள்!

132

குருசாமிபாளையம் சிவசுப்ரமணியசுவாமி கோயில் – புராணக் கதைகள்!

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் என்ற ஊரில் உள்ள கோயில் சிவசுப்ரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சிவசுப்ரமணியசுவாமி மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என்று இரண்டு மூலவர் இருப்பது கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இங்கு ஏகாம்பரேஸ்வரர், வல்லப கணபதி, துர்க்கை, சனீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் 9 வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபமேற்றி சிவசுப்ரமணியரை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். திருமண பாக்கியம் கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பொங்கலிட்டும், அன்னதானம் செய்தும் நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருநாளின் போது முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபம் நடைபெறும். அப்போது தங்களது கையால் மாலை தொடுத்து சுவாமிக்கு சாற்றி விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தக் கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும். சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம்.

முருகப் பெருமானின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு, இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து மனமுருகி வழிபட்டார். இதனால், மனமகிழ்ந்த முருகப் பெருமான் அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்று ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. அதன் பிறகு வீரபாகுவின் வம்சத்தினரின் முருகப் பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறிய அளவிலான கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.