சங்கர நாராயணர் துளசி விபூதி பிரசாதம் – புராணக் கதைகள்!

103

சங்கர நாராயணர் துளசி விபூதி பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் சங்கரநாராயணர் கோயிலில் கொடுக்கப்படும் துளசி விபூதி பிரசாதம் குறித்து பார்ப்போம். சங்கரன்கோயிலில் உள்ளது சங்கரநாராயண சுவாமி கோயில். இந்தக் கோயிலில் உள்ள சிவன் மற்றும் பார்வதி சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சன்னதி உள்ளது. இந்தக் கோயிலில் காலையில் பூஜையின் போது மட்டுமே துளசி தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதையடுத்து, மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.