சனி பகவானை ஏன் சூரிய தேவன் மகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்? – புராணக்கதை!

83

சனி பகவானை ஏன் சூரிய தேவன் மகனாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்? – புராணக்கதை!

நவக்கிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாகவும் திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவது உண்டு. அப்படிப்பட்ட சனி பகவானின் பிறப்பு குறித்த கதையை இந்தப் பதிவில் பார்ப்போம்.

​சனி பகவான் பிறப்பைப் பற்றிய உண்மை கதை:

​சூர்ய பகவான்:

பழமை வாய்ந்த புராண கதைகளின் ஒன்று தான் சனி பகவானின் பிறப்பு மற்றும் அவரது தந்தை சூர்ய பகவான் கைவிடப்பட்ட கதையும். இந்து மதத்தில், சனி இறைவன் தண்டனையின் கடவுளாக மிகவும் மதிக்கப்படுகிறார்.

அவர் ஒருவரின் தவறான செயல்களைக் கணக்கிட்டு, அவ்வப்போது அதற்கேற்ப தண்டனைகளை வழங்குவதில் வல்லவர். இந்து மதத்தில் அவருக்கு அஞ்சாதவர் எவரும் இலர். சூர்யா சித்தாந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தவறு செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் உரிய தண்டனையை வழங்கும் ஆற்றல் கொண்டவர்.

சனி பகவான்:

சனி திசையில் இருக்கும் மனிதர்களுக்கு ஒருவித பயத்தை மனதில் உருவாக்குவார் சனிபகவான். அதிலும்யாரேனும் தவறான பாதையில் செல்கிறார் என்றால் அவர்களுக்கு மரணப் பயத்தையே காண்பித்து விடுவார்.

ஒருமுறை சிவபெருமானை நோக்கி சனி பகவான் கடுமையான தவம் புரிந்தார். அவரின் தவத்திற்கு பிரதி பலனாக சிவபெருமான் ஒரு வரம் அளித்தார், மனிதர்களின் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகளையும், அவர்களின் நல் செயல்களுக்கு வெகுமதியும் தரும் வரத்தை வழங்கினார்.

அதே போன்று கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் வழங்க சனிபகவானால் முடியும்.

பழிவாங்குதல்:

ஒருவரின் தீய செயலுக்கு தண்டனைக் கொடுக்கும் வரத்தை இவ்வளவு கடுமையான தவம் இருந்து பிடிவாதமாக சிவனிடம் வாங்கியதற்கு முக்கிய காரணம் அவர் தந்தை சூரியன் தான்.

அவர் தந்தையின் தவறான செயலுக்கு சனி பகவான் பலியானார். இதனால் கோபம் கொண்ட சனி இந்த வரத்தை சிவனிட ம் இருந்து பெற்றார்.

சனியின் தாய் ​சாயா தேவி:

சாயாதேவி தான் சூரிய பகவானின் மனைவி ஆவார். சனி பகவான் கர்ப்பத்தில் இருந்தபோது அவர் சிவபெருமான் மீது தீவிர பக்தியில் இருந்தார். தன் உடல், பொருள், ஆவி என அனைத்திலும் சிவபெருமானையே நினைத்து கொண்டிருந்ததால் அவர் தன் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டார்.

இதனால் அவரின் ஆரோக்கியம் மோசமடைந்தது, மேலும் இது அவரின் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதித்தது. இதன் விளைவாக குழந்தை மிகவும் பலவீனமாகவும், இருண்டநிறத்திலும் பிறந்தது. ​சனிபகவான் தனது தந்தை சூரிய தேவரால் நிராகரிக்கப்பட்டார்:

தனது மகன் தன்னை போல பிரகாசத்துடனும், வலிமையுடனும் இல்லாமல் மிகவும் பலவீனமாகவும், இருண்ட நிறத்திலும் இருந்ததால் சூரியாகவான் சனியை தன் மகனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அது மட்டுமின்றி தனது மனைவி சாயாவையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் நிராகரிப்பால் தாய், மகன் இருவரும் அவமானப்படுத்தப்பட்டு பெரிய துன்பத்திற்கு ஆளானார்கள்.

சனி பகவானின் தவம்:

தனது தந்தைக்கு சமமான சக்தியையும் பார்வையையும் பெறுவதற்காக, சனி தனது குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் தியாகம் செய்து, சிவபெருமானை நோக்கி, கடுமையான தவம் செய்தார்.

அவரது மிகுந்த பக்தி மற்றும் நோக்கத்தால் ஈர்க்கப்பட்ட சிவன் அவருக்கு வரத்தை வழங்கினார். இதன் மூலம் அவர் தண்டனைகளையும் வெகுமதிகளையும் வழங்குவதற்கான உரிமையையும் அதிகாரத்தையும் பெற்றார்.

சனிபகவானுக்கு சிவன் கொடுத்த வரம்:

சூர்யா சித்தாந்தம்:

சனி பகவான் ஒரு தெய்வீக நிலையை அடைந்துவிட்டார். சூர்ய சித்தாந்ததின் படி சனிபகவான் தீய காரியங்கள் செய்பவர்களின் மீது தனது துன்மார்க்க பார்வையை வீசும் நித்தியத்துவத்தை அடைந்தார்.

அவரின் சக்தியை கொண்டு எந்த கடவுளுக்கும், அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் அவரின் செயல்களுக்கு ஏற்ப தண்டனையையும், பரிசையும் கொடுங்க அவரால் முடியும்.

சனிபகவானுக்கு சிவன் கொடுத்த வரம்:

இந்த எல்லா சக்திகளினாலும், சனி பகவான்  சுய முக்கியத்துவம் வாய்ந்தவராக வளர்ந்தார். அவர் தன் தந்தை சூரியனை தனது மிருகத்தனமான பார்வையால் தண்டித்தார்.

வஞ்சகம் மற்றும் துரோகம் செய்பவர்கள், பாவங்களை பற்றி பயப்படாதவர்கள் மற்றவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படுபவர்கள், மற்றவர்களின் வாழ்க்கையை கெடுப்பவர்கள் என யாரும் சனிபகவானிடம் இருந்து தப்ப முடியாது.

அவர்களின் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை கண்டிப்பாக அவர்களுக்கு கிடைத்தே தீரும்.

​சனி பகவான் பற்றிய புராணக்கதை:

சனி பகவானின் கடுமையான பிடியிலிருந்து தப்பிக்க ஹனுமனை வழிபடக் கூறுவார்கள். இதற்கு சான்றாக இரண்டு புராணக் கதைகள் இருக்கிறது. அதாவது ஹனுமன், சனி பகவானின் கர்வத்தை அடக்கி ஒரு பாடம் கற்பித்தார் என்பதும், மற்றொன்று ராவணனின் சிறையிலிருந்து அவரை எவ்வாறு மீட்டார் என்பதே ஆகும்.

நவகிரகம்:

ஒன்பது கோள்கள் அமைந்திருக்கும் நவ கிரகத்தின் தலைவன் சூரிய பகவான் அவர் தான் ஆஞ்சநேயரின் குரு ஆவார்.  தன் குருவிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தார் ஆஞ்சநேயர். தன் குரு தட்சணையை செலுத்துவதற்காக எதாவது கட்டளையிடும் படி சூரியபகவானிடம் வலியுறுத்தினார்.

ஹனுமன் மற்றும் சனிபகவானின் சந்திப்பு:

சூரியபகவானின் கோரிக்கை:

பல வற்புறுத்தல்களுக்குப் பிறகு, சூரியபகவான் தன் மகன் சனிபகவானை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுமனிடம் வேண்டினார். சனிபகவான் வேறு எவரும் இல்லை எனக்கும் சாயா தேவிக்கும் பிறந்த மகன் என்றும், யம மற்றும் யாமிக்கு மூத்த சகோதரர் என்றும் கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சனி பகவானை சந்திக்க ஹனுமன் புறப்பட்டார்.

ஹனுமன் மற்றும் சனி பகவானின் சந்திப்பு:

சூரிய பகவானின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஹனுமன் சனி பகவானை சந்தித்து அவர் தந்தையின் கோரிக்கையை கூறினார். சனி பகவான் தனது தந்தையின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமின்றி ஹனுமனின் தோற்றத்தையும், வாலையும் பார்த்து கேலி செய்தார்.

சனி பகவானின் மன்னிப்பும் அழுகையும்:

சனி பகவானின் கர்வத்தைப் பார்த்து ஹனுமன் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். அவர் சனி பகவானை தனது வாலால் சுற்றி இறுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சனி பகவானுக்கு வலி தாங்க முடியாமல் அழுக ஆரம்பித்தார்.

தன் தவறை உணர்ந்தார் தன் சக்தியை தவறுதலாக இனி பயன்படுத்த மாட்டேன் என்று வாக்களித்தார். பின்னர் தன் தந்தை சூரிய பகவானின் கோரிக்கையை ஏற்று வீடு திரும்புவதாக உறுதியளித்தார்.

சனி பகவானின் அருள் பெறுதல்:

எண்ணெய் வழங்குதல்:

ஹனுமானின் இச்செயலால் சனி பகவானின் உடல் முழுவதும் காயமடைந்து வலியால் துடித்தார். ஹனுமான் அவரின் வலியை குறைப்பதற்கு எண்ணெய் கொடுத்து அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்ள சொன்னார். இதனால் அவரின் வலி குறைந்தது. ஆகையால் சனிக்கிழமைகளில் ஹனுமன் பக்தர்கள் சனிக்கு எண்ணெய் ஊற்றி வழிபட்டு வந்தால் சனி பகவானின் தொந்தரவில் இருந்து தப்பிப்பார்.

அனுமனின் ஆசீர்வாதம்:

ஆகையால், சனி பகவானின் கோபத்தை எதிர்கொள்பவர், எவரும் அனுமனின் உதவியை நாடினால், அவர்களை துன்புறுத்தாமல் மன்னிக்குமாறு சனியைக் கேட்டுக் கொண்டார்.