சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

139

சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள் கோயில் – புராணக் கதைகள்!

விருதுநகர் மாவட்டம் சோலைக்கவுண்டன்பட்டி என்ற ஊரில் உள்ள கோயில் நம்பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் திருவேங்கடமுடையான் (சீனிவாசப்பெருமாள்) மூலவராக காட்சி தருகிறார். தாயார் ஸ்ரீ தேவி, பூதேவி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரி 9 நாளும் பெருமாள் புறப்பாடு உண்டு. சித்திரை வருடப்பிறப்பு, ராமநவமி, கோகுலாஷ்டமி, திருக்கார்த்திகை, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி, மார்கழி சிறப்பு பூஜை என பெருமாளுக்குரிய அனைத்து விசேஷ பூஜைகளும் இங்கு உண்டு.

நவக்கிரகம் அனைத்தும் தமது தேவியருடன் உட்கார்ந்த நிலையில் அனுக்கிரக மூர்த்திகளாக அருள் பாலிக்கிறார்கள். ராசிக்கட்டமும், ராசியும் இருப்பது கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மூலவரைச் சுற்றிலும் யோக நரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் வீற்றியிருக்கிறார்கள். கோயிலின் சுற்றுப் பகுதியில் விநாயகர், லட்சுமி, துர்க்கை, லட்சுமி நரசிம்மரும் உள்ளனர்.

திருமணத் தடை நீங்க, வேலை வாய்ப்பு கிடைக்க, பதவி உயர்வு பெற, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். அதோடு, எந்த கிரக தோஷமாக இருந்தாலும் இந்தக் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

மூலவர் திருவேங்கடமுடையான் என்ற சீனிவாசப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ராசிக்கட்டமும், ராசியும் இருப்பது கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஆகையால், ராசி நட்சத்திரம் தெரியாமல் இருக்கும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் வழிபட்டால் அவரவர்களுக்குரிய பலன் கிடைக்கும்.

என்ன ராசி, என்ன நட்சத்திரம் என்று தெரியாவிட்டாலும் கூட விருதுநகரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள சோலைக்கவுண்டன்பட்டி சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டால் உங்களது ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய பலன் கிடைக்கும். இப்படி அந்தந்த ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய பலனை சீனிவாசப் பெருமாள் வழங்குவதால், இவர் நம்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

குறிப்பு: பதிவுக்கு ஏற்ற புகைப்படம் இல்லை