நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயில் தேங்காய் பிரசாதம் புராணக் கதைகள்!

88

நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயில் தேங்காய் பிரசாதம் புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் முனியாண்டி கோயிலில் கொடுக்கப்படும் தேங்காய் பிரசாதம் குறித்து பார்ப்போம். வேலூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி பாலா திரிபுரசுந்தரி கோயிலில் நவராத்திரி விழாவின் போது கலசத்தில் தேங்காய் வைக்கப்படுகிறது. இந்த தேங்காயானது அடுத்த வருடம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த தேங்காயை அடுத்த வருடம் வரும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் பூஜை செய்யப்பட்டு அந்த தேங்காயை உடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

இந்தக் கோயிலில் குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சரஸ்வதியின் அம்சமாக பாலா திகழ்கிறால். ஆதலால், படிக்கும் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன.

பாலாவை வணங்கி வழிபடுவதன் மூலம் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கிரகித்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும். மேலும், கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள்.