பகவதியம்மன் கோயில் மண்டையப்பம் பிரசாதம் – புராணக் கதைகள்!

137

பகவதியம்மன் கோயில் மண்டையப்பம் பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் வரசித்தி விநாயகர் கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் பிரசாதம் குறித்து பார்ப்போம். நாகர்கோவில் அருகிலுள்ள மண்டைக்காடு என்ற பகுதியில் உள்ள கோயில் பகவதியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் என்ற பிரசாதம் படைக்கப்படுகிறது. இந்த பிரசாதமே பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் எடுத்துக் கொள்வதன் மூலமாக தீராத தலைவலியும் நீங்கும் என்பது ஐதீகம்.