புத்தேரி யோகீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

95

புத்தேரி யோகீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புத்தேரி என்ற ஊரில் உள்ள கோயில் யோகீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் யோகீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தைத் தொடர்ந்து வரும் வெள்ளியன்று இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலை கண் திறப்பு வைபவம் நடக்கும். இந்தக் கோயிலில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என்று எதுவும் இல்லாத வித்தியாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் ஒன்று உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார்.

மூலவராக வணங்கும் சுவரின் மணலையே பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. புத்திர தோஷம் உள்ளவர்கள் இதனை நீரில் கரைத்து சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி எடுத்து காவி வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

தினந்தோறும் பூஜையின் போது யோகீஸ்வரருக்கு சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. வைகாசி விசாக திருநாளின் போது சாஸ்தா மற்றும் யோகீஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும். அப்போது மாம்பழம், பலாப்பழம், பச்சரிசி மாவு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து சாறு தயாரிக்கப்படும். மாம்பால் என்று அழைக்கப்படும் இந்த கலவையை சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்கிறார்கள்.

பூலா உடைய கண்டன் சாஸ்தா தனி சன்னதியில் இருக்கிறார். பீட வடிவிலுள்ள சாஸ்தாவின் பின்புறம் அவரது சிலையும், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தன்று மட்டும் இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாகிறார். யோகி இருந்த இடத்தில் புற்று வளர்ந்ததால் புற்றேரி என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் புத்தேரி என்று மருவியது.

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில் காவல் தெய்வமான சாஸ்தாம் பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு பூலா உடைய கண்டன் சாஸ்தா என்று பெயரிட்டு சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒரு சமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர் இங்கேயே பல காலம் தங்கினார்.

இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. இதனால், வியந்த மக்கள் புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாக கருதி வழிபட்டனர். இந்த சுவரை சிவ அம்சமாக கருதிய பக்தர்கள் யோகீஸ்வரர் என்று பெயர் சூட்டினர்.