புற்றுமண் பிரசாதம் – புராணக் கதைகள்!

91

புற்றுமண் பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் அம்மன் கோயில்களில் கொடுக்கப்படும் புற்றுமண் பிரசாதம் குறித்து பார்க்கப் போகிறோம். பொதுவாக சிவன் கோயிலாக இருந்தால் திருநீறும், அம்மன் கோயிலாக இருந்தால் குங்குமமும், மஞ்சளும், சில கோயில்களில் புற்று மண்ணையும் பிரசாதமாக கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் புற்று மண் பிரசாதம் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கிறோம்.

சிலந்தி வலை, புற்று மண், தூக்கணாங்குருவிக்கூடு ஆகியவற்றை எளிதாக உருவாக்கிவிட முடியாது. புற்று என்பது வழிபடத்தக்க ஒரு உருவம். கும்பாபிஷேக நாளின் போது மிருத்ஸங்க்ரணம் என்ற கிரியைக்கு புற்று மண் தேவைப்படுகிறது. துளசி செடி மண், வில்வமரத்தடி மண், புற்றுமண் ஆகியவை எல்லாம் புனிதமானவை. ஆகையால், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில், திருவேற்காடு, திருவொற்றியூர் ஆகிய தலங்களில் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.