மாசாணியம்மன் பச்சிலை பிரசாதம் – புராணக் கதைகள்!

188

மாசாணியம்மன் பச்சிலை பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் கோயிலில் கொடுக்கப்படும் பச்சிலை பிரசாதம் குறித்து பார்ப்போம். பொள்ளாச்சி அருகிலுள்ளது ஆனைமலை மாசாணியம்மன் கோயில். நெற்றியில் சக்கரத்துடன் மாசாணியம்மன் சயன நிலையில் காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் பிரசாதமாக பச்சிலை கொடுக்கப்படுகிறது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகள், உடற்பிணிகள் ஆகியவற்றை நீக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையில் இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.