மிளகாய் வற்றல் பிரசாதம் – புராணக் கதைகள்!
ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தப் பதிவில் மிளகாய் சித்தர் சமாதி கோயிலில் கொடுக்கப்படும் மிளகாய் வற்றல் பிரசாதம் குறித்து பார்ப்போம். தூத்துக்குடி, மாவட்டம் கழுகுமலை கிரிவலப்பாதையில் மிளகாய் சித்தர் சமாதி உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மிளகாய் வற்றல் தரப்படுகிறது. இதனை வீட்டிற்கு கொண்டு சென்று சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் நோய் நொடிகள் நீங்கும் என்பது ஐதீகம்.