முத்துதேவன்பட்டி நாக காளியம்மன் கோயில் – புராணக் கதைகள்!

162

முத்துதேவன்பட்டி நாக காளியம்மன் கோயில் – புராணக் கதைகள்!

தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி என்ற ஊரில் உள்ள கோயில் நாக காளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் நாக காளியம்மன் மூலவராக காட்சி தருகிறார். பௌர்ணமி, அமாவாசை, மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகிய நாட்களில் இரவில் ஹோமத்துடன், நாக காளியம்மனுக்கு பூஜை நடக்கும்.

இங்குள்ள சொர்ணலிங்கேஸ்வரர் அஷ்டோத்ர லிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள ஒரு பள்ளத்தில் மூலிகைகளால் ஆன பாதாள வைத்தீஸ்வரர் லிங்கம் இருக்கிறது. காமாட்சியம்மன் ஓலைக்கூரையின் கீழ் தனிச்சன்னதியில் இருக்கிறாள். சிவராத்திரி அன்று இவளுக்கு மூங்கில் அரிசியை, கரும்புச்சாறு சேர்த்து பொங்கலிட்டு படைப்பர். விநாயகர், கௌமாரி, பகவதிம்மன் சன்னதிகளும் உள்ளன.

திருமணத்தில் தடை உள்ளவர்கள், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். நவராத்திரியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை துவங்கி மூன்று நாள் விழா நடக்கும். இந்த வேளையில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.

பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இரவில் ஹோமத்துடன் நாக காளியம்மனுக்கு பூஜை நடக்கும். பௌர்ணமி இரவு பூஜைக்குப் பின் அம்பிகைக்கு பிரசித்தி பெற்ற 108 அம்பிகையரில் ஒருவரைப் போல் அலங்காரம் செய்கின்றனர். உதாரணமாக சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சியம்மன் போன்ற அலங்காரங்கள் செய்யப்படும்.

மார்கழியில் ஆண்டாள் அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். சரஸ்வதி பூஜையன்று அம்பிகை வெண்ணிற பட்டு அணிந்து சரஸ்கதியாக காட்சி தருவாள். அன்று தாமரை மொடாடல் குழந்தைகள் நாக்கில் எழுதி அட்சராப்பியாசம் செய்கின்றனர். அந்தந்த ஊர்களிலுள்ள அம்பிகைக்கு எந்த முறைப்படி பூஜை நடக்குமோ அதே போன்று இங்கும் பூஜை நடக்கும். நைவேத்யமும் மாறுபடும். அடுத்த பௌர்ணமி வரையில் அம்பிகை இதே அலங்காரத்தில் காட்சி தருவது இன்னும் விசேஷம்.

இங்குள்ள சொர்ண லிங்கேஸ்வரர் அஷ்டோத்ர லிங்கமாக காட்சி தருகிறார். ஆவுடையாருக்கு கீழுள்ள பீடத்தில் நந்தி இருக்கிறது. திருமணத் தடை இருப்பவர்கள் சொர்ணலிங்கேஸ்வரர் மற்றும் அம்பிகைக்கு விரலி மஞ்சள் மாலை அணிவிக்கின்றனர். அதை மீண்டும் பெற்று வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். இதனால் விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பது நம்பிக்கை.

ஜாதக ரீதியாக ஆண்களுக்கு 7 ஆம் இடமும் (களத்திர ஸ்தானம்) பெண்ணுக்கு 8 ஆம் இடமும் (மாங்கல்ய ஸ்தானம்) திருமண பாக்கியத்தை நிர்ணயிக்கும் இடங்களாகும். இதன் அடிப்படையில் இந்த மரத்தை 7 அல்லது 8 முறை வலமாகவும், மீண்டும் இடமாகவும் சுற்றுகின்றனர்.

முல்லையாற்றின் மேற்கு கரையில் கோயில் அமைந்துள்ளது. அம்பிகையின் கைகளில் உடுக்கை, நாகம், திரிசூலம் மற்றும் குங்குமம் இருக்கிறது. சிம்ம வாகனத்தின் மீது வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள். நவராத்திரியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை துவங்கி 3 நாள் விழா நடக்கும். இவ்வேளையில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்பிகைக்கு கூழ் படைத்து பூஜை நடக்கும்.

திருமண பாக்கியத்தை அருளும் நாக காளியம்மன் முத்துதேவன்பட்டியில் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு மாதம் ஒரு முறை பிரபல கோயில்களில் அம்பாள் அலங்காரம் செய்யப்படுவதும், அதை மாதம் முழுவதும் கலைக்காமல் வைத்திருப்பதும் விசேஷம். முற்காலத்தில் இந்தப் பகுதியில் சங்குப் பூ செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்த பகுதிகளில் ஒரு புற்று இருந்தது.

அந்த ஊர் சிவபக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அம்பிகை, தான் புற்றுக்குள் இருப்பதாக உணர்த்தினாள். அதன்படி புற்றைப் பார்த்த போது அதற்குள் அம்பாளின் சுயம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். பின் அம்பிகைக்கு சிலை வடித்து, புற்றுக்கு மேலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். புற்றில் தானாகத் தோன்றியதால் அம்பிகைக்கு சுயம்பு நாக காளியம்மன் என்று பெயர் சூட்டப்பட்டது.