லேகிய பிரசாதம் – புராணக் கதைகள்!

103

லேகிய பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதிவில் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் லேகிய பிரசாதம் பற்றிய புராணக் கதைகள் குறித்து பார்ப்போம். பொதுவாக பெருமாள் கோயில்களில் துளசியைத் தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியிலுள்ள சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள தன்வந்திரி சன்னதியில் லேகியம் மற்றும் தைலத்தைப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். உடல் நல பாதிப்பால் அவதிபட்டவர்களுக்கு இந்த தைலம் மற்றும் லேகியம் மருந்தாக பயன்படுகிறது.