வரட்டி சாம்பல் விபூதி பிரசாதம் – புராணக் கதைகள்!

92

வரட்டி சாம்பல் விபூதி பிரசாதம் – புராணக் கதைகள்!

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் கொடுக்கப்படுகிறது. பழநியில் பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கத்தில் புளியோதரை, திருப்பதியில் லட்டு, சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை, தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பொரி பிரசாதம் என்று கொடுக்கப்படுகிறது. இது தவிர, திருநீறு, குங்குமம், பஞ்சள், மண் உருண்டை, அவல், அரிசி, கோரைக்கிழங்கு, புற்றுமண், வரட்டி சாம்பல் என்று ஒவ்வொன்றும் பிரசாதமாக ஒவ்வொரு கோயில்களில் கொடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க: முண்டககண்ணியம்மன் கோயில்!

அந்த வகையில் இந்தப் பதிவில் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் வரட்டி சாம்பல் பற்றிய புராணக் கதைகள் குறித்து பார்ப்போம். ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்குரிய மாதம் தான். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்க்கும் விழாவும், வளைகாப்பு நிகழ்ச்சியும், தை மாதத்தில் பொங்கல் வைக்கும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு பூக்குழி இறங்குதல், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்வுகளும் நடத்தப்படும்.

அப்படி ஒரு விசேஷமான நிகழ்ச்சி தான் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி. அதுவும், வாரத்தில் ஏதாவது ஒரு வெள்ளி, செவ்வாய் அல்லது ஞாயிறு ஆகிய கிழமைகளில் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் போடுவார்கள். இந்த பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் வரட்டியின் சாம்பலே பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.