வைத்தீஸ்வரன் கோயில் –  புராணக்கதை!

66

வைத்தீஸ்வரன் கோயில் –  புராணக்கதை!

வைத்தீஸ்வரன் கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. நாடி சோதிடர்கள் நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.

இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சையிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

தலத்தின் சிறப்பு:

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள்.

வைத்தியநாத சுவாமி:

இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி அம்மன். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி.

தொழுநோயை குணப்படுத்தும் அங்காரகன்:

ஒன்பது கிரகங்களுள் ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும். தலமாகும். அங்காரகன்தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக அருள்பாளிக்கிறார்.

வைத்தீஸ்வரன் சிறப்பு:

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய் தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

புனித நீர்:

இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும். சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

செவ்வாய் கிரகத்திற்குரிய கோவில்:

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது என்னும் அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.

திருநாவுக்கரசருக்கு பிணிதீர்த்த தலம்:

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபட்டார்.

மூலிகை தைலத்துடன் காட்சியளிக்கும் மூலவர்:

இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

ஏழுகடல் முனிவர்களும் வழிபட்ட தலம்:

இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.

திருசந்தன உருண்டை பிரசாதம்:

கடவுளுக்கு படைத்த பிரசாதங்களாக திருநீரும், சாம்பல் திருச்சந்தன உருண்டை (அ) திருச்சாந்து உருண்டை நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது ஒமகுண்டத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.

நோய் தீர்க்கும் உப்பு மிளகு:

மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்:

ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.