‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’

0 426

‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ – ஸ்ரீ மஹா பெரியவா

அம்பாள் தன்னுடைய இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள்.

பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு.

 அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, ஃபிஸிக்ஸில் (physics-ல்) பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான், மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன.

இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள்.

 ‘ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’ (க்ரோதாகார-அங்குச-உஜ்வலா) என்பதாக லலிதா ஸஹஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

அஷ்டமீ-சந்த்ர-விப்ராஜ-தலிக-ஸ்தல சோபிதா

 அம்பாளுடைய ஸெளந்தர்ய வெள்ளம் நம் பாப, தாபங்களைப் போக்குவதுதான்; நம் ஹ்ருதய ஏரியில் நிரம்பி நிறைவதுதான். ஆனால் இதையெல்லாங்கூட அதற்குப் பலனாகச் சொல்லி, அதனால் அந்த அழகுக்கு ஏற்றம் கொடுக்க வேண்டியதில்லை; அது அத்தனை அழககாக இருப்பதே அதற்குப் பெரிய ஏற்றம்!

 கங்கையில் முழுகினவுடன் தத்க்ஷணமே (அந்த க்ஷணமே) பாபம் போய்விடுகிறது, தாபம் போய்விடுகிறது. ஆனால் உடனே எழுந்து வரத் தோன்றுகிறதோ? அப்புறமும் ரொம்ப நாழி அந்த வெள்ளத்தில் முழுகி முழுகி நீச்சலடித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்றுதானே தோன்றுகிறது?

 பாப ஹரணம், தாப சமனம் என்ற பலன்களுக்காக இல்லாமல், கங்கா லஹரியில் ஸ்நானம் செய்கிற ஆனந்தத்துக்காகவே, அந்தப் பலனுக்காகவே, ஆனால் பலன் கிலன் என்ற எண்ணங்கூட இல்லாமல் நீராடிக் கொண்டிருப்பதுபோல்தான் அம்பாளுடைய ஸெளந்தர்யப் ப்ரவாஹத்திலும் அதற்காகவே முழுகி ஆனந்தப்படவேண்டும் என்று ஆதி ஆசார்யாள் காட்டுகிறார்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம்

ஸெளந்தர்ய லஹரியில் ஸ்லோகம் 46-ல், அம்பாளுடைய நெற்றி திருப்பிவைத்த அர்த்த சந்திரன் மாதிரி இருக்கிறது என்னும்போது “அஷ்டமீ-சந்த்ர-விப்ராஜ-தலிக-ஸ்தல சோபிதா” (அரைவட்ட வடிவமான அஷ்டமி சந்திரன் போல் விளங்கும் நெற்றியை உடையவள்) என்ற லலிதா ஸஹஸ்ரநாம அபிப்ராயத்தைத்தான் மெருகேற்றியிருக்கிறார்.

பெரியவா சரணம்!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.