ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்த ராமானுஜர்

0 921

ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்த ராமானுஜர்

 ஸ்ரீ ராமானுஜர் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்திற்கும்,மாத்வாச்சாரியார் வாழ்ந்த காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்.இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அசூரி கேசவ சோமயாஜி தீட்சிதர் மற்றும் காந்திமதி தம்பதிகளுக்கு கி.பி.1017 ம் ஆண்டு பிறந்தார்.இவர் சிறுவயதிலேயே வேதங்கள் மற்றும் உபநிஷங்கள் மற்றும் அதிலுள்ள தத்துவங்கள் இவற்றை எளிதாக புரிந்து கொண்டார்.தனது 16 வது வயதில் ரக்ஷகாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட இவர் தன் தந்தையின் மறைவிற்குப் பின் ஸ்ரீபெரும்புதுரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு குடியேறினார்.

  downloadகாஞ்சீபுரத்தில் அத்வைத தத்துவத்தில் தலைசிறந்த பண்டிதரான பிரகாசர் என்கிற குருவிடம் சிஷ்யராக சேர்ந்தார்.அனைத்து ஞானங்களிலும் தேர்ச்சி பெற்ற தனது குரு பிரகாசர் அளித்த சில அத்வைத விளக்கங்களில் உடன்பாடு ஏற்படாத ராமானுஜர் தன்னுடைய குருவின் பொருந்தாத விளக்கங்களைக் கேட்டு கண்ணீர் விட்டார்.குருவை மிஞ்சும் சீடனாக விளங்கிய ராமானுஜரால் தனக்கு சிறுமை ஏற்படக்கூடாது என்று எண்ணிய பிரகாசர் அவரை கங்கையில் தள்ளி ஜலசமாதி செய்திட திட்டமிட்டார்.அப்படி குருவுடன் காசிக்கு போகும்போது தம்பியின் மூலம் குருவின் திட்டத்தை அறிந்த ராமானுஜர் பெருமாளின் துணையோடு ஒரே இரவில் காசியிலிருந்து காஞ்சிக்கு வந்து சேர்ந்தார்.ராமானுஜர் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட பிரகாசர் சில காலம் கழித்து காஞ்சிக்கு வந்து ராமானுஜரைக் கண்டு திகைத்துப் போனார்.பெருமாள் அருள் கொண்ட ராமானுஜரை இனி நாம் கொல்ல நினைக்கக் கூடாது என்று முடிவு செய்தார்.

 இதற்கிடையே ராமானுஜர் துறவறம் மேற்கொள்ள தன் மனைவியைப் பிரிந்தார்.காஞ்சி பூரணர் எனும் ராமானுஜரின் இளம் வயது நண்பர் தனது குருவான யமுனாசாரியாரை சந்திக்குமாறு கேட்க,ராமானுஜரும் ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.அவ்வாறு யமுனாசாரியாரிடம் வந்து சேர்ந்த ராமானுஜர் அவரது பூதஉடலை மட்டும் பார்க்க முடிந்தது.ஆனால் அவரது வலது கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன.இதனை ஆத்மபூர்வமாக புரிந்து கொண்ட ராமானுஜர் அவரை தனது மானசீக குருவாக ஏற்று அவரது மூன்று லட்சியங்களை நிறைவேற்ற சபதம் எடுத்தார்.

அதாவது:

1)வேதாந்த சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத் தத்துவ முறையில் விளக்கம் எழுதுவது.

2)பராசர முனிவரின் விஷ்ணு புராணத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வது

3)விசிஷ்டாத்வைதத்தை உலகிற்கு எடுத்து சொல்லி அறியாமையில் முடங்கிக் கிடக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனின் அருள் கிடைக்கச் செய்வது.

 ramanuja2இவ்வாறு இந்த மூன்று லட்சியத்தையும் நிறைவேற்றுவேன் என்று ராமானுஜர் அறிவிக்க யமுனாசாரியாரின் மூன்று விரல்களும் ஒன்றன் பின் ஒன்றாக திறந்தது.தனது விவாதத்தின் மூலம் பல இடங்களுக்குச் சென்ற ராமானுஜர் தனது விசிஷ்டாத்வைத தத்துவங்களை அங்குள்ள பண்டிதர்களுக்கு எடுத்துரைத்து வெற்றி பெற்றார்.ராமானுஜரின் குரு பீடத்தை பெரிய நம்பிகள் என அழைக்கப்படும் மகா பூரணர்,திருக்கோட்டியூர் நம்பி,திருமலை நம்பி,திருவரங்கப் பெருமாள் அரையர்,திருமலை ஆண்டான் எனப்படும் மாலாதரர் என்ற ஐவரும் அலங்கரித்தனர்.ராமானுஜர் ஜாதி ஏற்றத்தாழ்வை கடுமையாக எதிர்த்தவர்.தனது மனைவியின் ஜாதி ஏற்றத்தாழ்வே தம்முடைய துறவறத்திற்கு காரணம் என்றார்.ராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமல்ல பெரிய நிர்வாகியும் கூட.இவர் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம் கோவிலின் நிரவகத்தை ஏற்று அந்தக் கோவிலை சீர் படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்தினார்.

  120 வயது வரை வாழ்ந்த ஸ்ரீ ராமானுஜர் கி.பி 1137 ம் ஆண்டு மண்ணுலகை விட்டு இறைவனடி சேர்ந்தார்.ஸ்ரீ ராமானுஜர் வேதாந்த சங்கிரகம்,ஸ்ரீ பாஷ்யம்,கீதா பாஷ்யம் (பகவத் கீதையின் விளக்கம்),வேதாந்த தீபம்,வேதாந்த சாரம்,ஸ்ரீ ரங்க காத்யம்,நித்ய கிரந்தம் போன்ற நூல்கள் பலவற்றை எழுதினார்.

ராமானுஜருக்கு தனி கோவில்:

 ramanujaஇந்தியாவில் முதன்முறையாக சேலத்தில் ஸ்ரீபகவத் ராமானுஜருக்கு ரூ 6 கோடி மதிப்பில் தனி கோயில் உருவாகி வருகிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி மத வேற்றுமையை ஒழிக்க அனைத்து மக்களும் ஆலய வழிபாடு செய்ய முற்பட்டவர் ராமானுஜர்.இப்படிப்பட்ட மஹானின் ஆயரமாவது பிறந்தநாள் வரும் 2017 ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது. முதல்முறையாக ராமானுஜருக்கு சேலத்தில் உள்ள எருமாபாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் ரூ 6 கோடி  மதிப்பில் 85 அடி உயர ராஜகோபுரத்துடன் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.அதில் 74 மடாதிபதிகளைக் குறிக்கும் 74 தூண்கள் ராமனிஜர் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் சிற்பங்களும் அமைக்கப்படுகிறது. 2017 ம் ஆண்டு நடைபெற உள்ள ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவில் வெகு விமரிசையாக கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.