ருத்ராட்ஷத்தின் மகிமையை உணர்த்திய மஹா பெரியவா

0 293

ருத்ராட்ஷத்தின் மகிமை

 சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண்டும். மகா பெரியவா அவர்கள் ஒருமுறை ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும் என்று உணர்த்தினார்.

 சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.

 எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால்விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து, ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை,கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று அருணாசலபுராணம் விவரிக்கிறது. நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும்.

 மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும்,செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும்,ஆனந்தமும் கிடைக்கும் என்று மகா பெரியவா கூறியதை காணலாம்.

 இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திரமான “ஓம் நமசிவாய” உச்சரித்தல், இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை அடைவீர்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.