சபரி மலை யாத்திரை பாகம் – இரண்டு

0 111

 குழத்துப்புழா- ஐயன் குழந்தை வடிவில் பாலசாஸ்தா

 கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, அழகிய நதிக்கரையில் அமைந்திருக்கின்ற ஓர் ஊர்தான் குழத்துப்புழா. இந்த ஆலயத்தில் ஐயன் குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றார். இந்த ஆலயத்திற்கு அருகில் கல்லடையாறு என்னும் புனித நதி ஓடுகின்றது.

 பாலகனாக ஐயப்பன் வீற்றிருந்தாலும் எட்டுத் துண்டாக உடைபட்ட கற்சிலைதான் இன்றும் மூலஸ்தானத்தில் இருக்கிறது. அவை பூஜை நேரங்களில் ஒன்று சேர்க்கப்பட்டு, பூஜை முடிந்ததும் பழையபடி எட்டுத் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விடுவதும் தற்போது வழக்கமாக இருக்கிறது. இப்போதுள்ள இவ் ஆலயம்; கொட்டாரக்கரா என்ற பகுதியை ஆண்ட மன்னரால் உருவாக்கப்பட்டது. இந்த மன்னன் ஒரு சமயம் இந்த காட்டுப்பகுதிக்கு வந்தபோது, அவருடன் வந்த பணியாளர்கள் உணவு சமைப்பதற்காக , மூன்று கற்களை எடுத்து அடுப்பு தயாரித்தனர். அதில் ஒரு கல் மட்டும் சற்று பெரியதாக இருக்கவே கல்லை உடைத்து சிறிதாக்க எண்ணி, அவர்கள் அங்கு கவனிப்பாரற்றுக் கிடந்த பெரிய உருவ அமைப்பு கொண்ட கல் ஒன்றை எடுத்து அக் கல்லின் மீது போட்டு உடைத்தனர். ஆனால் உடைந்தது கல் அல்ல; அவர்கள் எடுத்துப் போட்ட அந்த உருவம் கொண்ட கல்தான். அப்போதுதான் அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது. உடைபட்ட அந்தக் கல் எட்டுத் துண்டுகளாக சிதறி அதிலிருந்து ரத்தம் கொட்டத் துவங்கியது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் பதறிப் போயினர்.

 உடைபட்ட அந்தக் கல் ஐயப்பன் விக்ரகம் என்றும்; அந்த இடத்தில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில் ஒன்று இருந்தது என்றும் தெரிய வந்தது. மிகப் பெரிய தீங்கை இழைத்து விட்டோமே என்று மன்னர் வருந்த, அதற்குப் பரிகாரமாக அதே இடத்தில் கோவில் ஒன்றை நிறுவினால் போதும் என்று நம்பூதிரிகள் சொல்ல, அதன்படி மன்னர் கட்டிய கோவில்தான் இப்போது இருக்கிறது.

 குளத்துப்புழா கோவிலுக்கு அருகில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது கல்லடையாறு. இந்த ஆற்றிற்கும் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஆற்றில் சில மீன்கள் உண்டு. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மீன்களுக்கு பொரி போடுவது ஒருவித வழிபாடாகவே இருக்கிறது. இங்குள்ள மீன்கள் மச்சகன்னி எனப்படும் கடல் கன்னியின் வழி வந்தவைகளாகும். புராண காலத்தில் மச்சக்கன்னி இங்குள்ள பாலகன் ஐயப்பன் மீது மையல் கொண்டு அவனையே மணம் முடிப்பேன் என்று பிடிவாதமாக இங்கு வந்தாளாம். அவளை மணம் முடிக்க மறுத்து விட்ட ஐயப்பன், பின்னர் அவளது வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கல்லடை ஆற்றிலேயே இருந்து கொள்ள அனுமதி அளித்தார். மச்சக் கன்னி தனது தோழிகளுடன் மீன்களாக இந்த ஆற்றில் இருக்கிறாள் என்பது ஐதிகம். தோல் நோய் உள்ளவர்கள் இங்குள்ள மீன்களுக்கு உணவிட்டால் நோய் தீரும் என்பது ஐதிகம்.

சபரி மலை யாத்திரை தொடரும்….

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.