சபரிமலை யாத்திரை பாகம் –32 எருமேலி

0 22

சபரிமலை(Sabarimala)யாத்திரை(yatra)பாகம்-32

 

எருமேலி:

சபரிமலை செல்லும் பக்தர்கள் பேட்டை துள்ளல் நடத்துகின்ற இடம் எருமேலி. பக்திபெருக்குடன் மலையேறும் பக்தர்கள் தங்களை மறந்து சரண கோஷம்  முழங்க ஐயப்பனை உணர்ந்து ஆடிப்பாடுகின்ற இடம் இது. இதற்கு ஐயப்பன் வரலாற்றில் கதை ஒன்று உண்டு. தேர்வகளுக்கும், பூமியில் வாழுகின்ற  மக்களுக்கும் பெரும் தொல்லைகளை கொடுத்து மக்களை மிரட்டி வந்தவர் மஹிஷி. அவரை ஐயப்பன் சம்ஹாரம் செய்து சாப விமோசனம் கொடுத்த இடம்  எருமேலி என்பது ஐதீகம். அதனை நினைவுகூரும் வகையில் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதனால் அந்த இடம் ‘எருமை (மகிஷி) கொல்லி‘ என்று  அழைக்கப்பட்டு வந்துள்ளது.

அது மருவி ‘எருமேலி‘யானது என்கின்றனர். முன்காலங்களில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் மட்டுமே பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை  வழக்கமாக கொண்டிருந்தனர். மகரவிளக்கு காலத்தில் மட்டும் எருமேலியில் பேட்டை துள்ளல் நடந்துள்ளது. இப்போது மண்டல மகரவிளக்கு காலம்  மட்டுமின்றி மாத பூஜைகளுக்காக எப்போதெல்லாம் நடை திறக்கிறதோ அப்போதெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

எருமேலியில் எல்லா  சீசன்களிலும் பேட்டை துள்ளலும் நடைபெறுகிறது. எருமேலியில் ஐயப்ப பக்தர்கள் உடலில் குங்குமம் பூசி கையில், கதை, வாள், சரம், அம்பு ஆகியவையும்  ஏந்தி ‘ஐயப்ப திந்தக்க தோம்… சுவாமி திந் தக்க தோம்…‘ என்ற தாளத்துடன் கோஷமிட்டவாறு நடனமாடி துள்ளுகின்ற காட்சிகளை காணலாம்.

எருமேலி சிறிய கோயிலில் இருந்து பேட்டை துள்ளல் தொடங்குகிறது. அங்கிருந்து பாபர்பள்ளியில் செல்லும், அங்கு பாபரை வணங்கி காணிக்கை செலுத்திய  பின்னர் சரண கோஷம் எழுப்பி பெரியகோயில் நோக்கி செல்வர். அங்கும் வணங்கிவிட்டு பிரசாதம் வாங்கிய பின்னரே பேட்டை துள்ளல் நிறைவு பெறும்.

அம்பலப்புழா பேட்டை துள்ளல் :

இங்கு அம்பலப்புழை, ஆலங்காட்டு பக்தர்கள் குழுக்களின் பேட்டை துள்ளல் சிறப்பு வாய்ந்தது. ஆகாயத்தில் வட்டமிட்டு பறக்கின்ற கருடனை கண்டு  மெய்சிலிர்க்கும் வகையில் அம்பலப்புழா பேட்டை துள்ளல் நடைபெறும்.பகல் வேளையில் வானத்தில் தெரிகின்ற நட்சத்திரத்தை பார்த்து ஆலங்காட்டு பேட்டை  துள்ளல் நடைபெறும்.

 –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.