சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்

0 202

சபரிமலையில் செய்ய வேண்டிய வழிபாடுகள்

1. இரு முடியுடன் 18 படி ஏறுதல்.

2. நெய் அபிஷேகம்.

3. கொடி மரத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்.

4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)

5. ஐயப்ப தரிசனம்

6. மஞ்சமாதா தரிசனம்

7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு

8. கடுத்த சாமிக்குப் பிரார்த்தனை

9. கருப்பசாமிக்குப் பிரார்த்தனை

10. நாகராஜா, நாகயட்சிக்குப் பிரார்த்தனை.

11. வாபர் சாமிக்கு காணிக்கை செலுத்துதல்.

12. திருவாபரணம் பெட்டி தரிசனம்

13. ஜோதி தரிசனம்

14. பஸ்ம குளத்தில் குளித்தல்

15. மகர விளக்கு தரிசனம் 16.பிரசாதம் பெற்றுக் கொள்ளுதல் (அரவனை, பாயசம், அப்பம் உள்பட) 17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல் 18. 18 படி இறங்குதல்.

– இவை மகரஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதிகளாகும். மற்றவர்கள் மகரஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவற்றை செய்யலாம்.

எந்த நாளில் மாலை அணிவது சிறந்தது:

 சபரிமலை செல்லவிரும்பும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் நாள், நட்சத்திரம் திதி ஆகியவை பார்க்கத் தேவை இல்லை. குளிர் காலத்தின் தொடக்க நாள் அது.

 உடலை அப்போதிருந்தே தயார்படுத்திக் கொண்டால்தான் குளிர் நிரம்பிய மார்கழி, தை போன்ற மாதங்களில் மலைப் பிரதேசத்தில் நம் உடல் ஆரோக்கியமாக விளங்கும். இதை கருத்தில் கொண்டே கார்த்திகை மாதம் மாலை அணிவிக்கிறார்கள்.

 கார்த்திகை மாதம் முதல் தேதி தவறினால் ஏதாவது ஒரு புதன் கிழமையிலோ, சனிக்கிழமையிலோ அல்லது உத்தர நாட்சத்திரம் வரும் நாளிலேயோ மாலை அணியலாம். புதன் என்ற கிரகத்துக்கு உரிய அதிபதி ஸ்ரீமஹாவிஷ்ணு. இவர் தர்ம சாஸ்தாவின் அன்னையாவார்.

 அவரை நினைவூட்டும் விதமாகவும், வழிபடும் விதமாகவும் புதன்கிழமை அமைகிறது. சனிக்கிழமையில் உத்தர நட்சத்திரத்தில் தர்ம சாஸ்தாவின் ஜனனம் பந்தளத்தின் மன்னன் ராஜசேகரன் பார்க்கும் தினத்தில் பம்பையாற்றில் நிகழ்ந்தது. எனவே அந்நாளில் மாலை அணிவதும் சிறப்பாகும்

ஐயப்பன் உருவம் உணர்த்தும் தத்துவம்:

  ஐயப்பன் அமர்ந்துள்ள திருக்கோலமே ஒரு யோகாசனமுறை யாகும். இரண்டு குதிகால்களின் மீது உடலின் அடிப்பாகத்தை அழுத்தி, உட்பாரம் வயிற்றுடன் குதிகால்களில் தூக்க முன்புறம் சாய்ந்த நிலை. இந்நிலையில் உடல் வில்போல் ஆடும் தன்மையுடையது.

 குதிக்கால்களின் அழுத்தம் தொடைமூலம் வயிறு பாகத்தை உந்த, உந்திக்கமலம் அழுத்தப்பட்டு உட்சுவாசம் புறசுவாசம் மற்றும் பிராணயாம முயற்சியினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தி சுலபத்தில் மேல் நோக்கி எழுப்ப உதவுகிறது.

இந்த சக்தி ஆறு ஆதாரங்களில் பாய்ந்து பிரம்மந்திரம் எனப்படும் சகஸ்ரதள கமலத்தை எட்டி ஜோதி மயத்தில் கலந்து நிற்கும் நிலையைக் காட்டுகிறது. இதுவே பிரணவ ஸ்வரூபம் ஆகும். அம்பிகையின் பத்து வித்யைகளில் ஒருவளான திரிபுர பைரவி இம்மாதிரி யோக நிலையில்தான் அமர்ந்திருக்கிறாள்.

ஆந்திராவிலுள்ள ஹேமாவதி என்ற இடத்திலும் இம்மாதிரி அமர்ந்துள்ள யோக தட்சணாமூர்த்தியை தரிசிக்கலாம். அய்யப்பனின் வலக்கை சின் முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சின் முத்திரையை “அறிவடையாளம்” என்பர்.

இறைவனை உணர்த்துவது பெரு விரல், ஆவியை உணர்த்துவது சுட்டு விரல் வினையை உணர்த்துவது நடுவிரல், மாயை உணர்த்துவது அணி விரல், மலத்தனை உணர்த்துவது சிறு விரல், பெருவிரலும் சுட்டு விரலும் சேருவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறது.

மற்றொரு கை காட்டும் தத்துவம் ஓம்காரமாகிய அகார, உகார, மகார வடிவினன் நான் என்னைச் சரணடைந்தவர்களை தூங்காமல் தூங்கி சுகம்பெறும் ஆத்மபோத நிரந்தர நிலையை அளிக்க இத்தவத்திருக்கோலத்தில் இருக்கிறேன்.  அந்த நிலை அடைய என் பாதார விந்தத்தை நாடுங்கள் என்று தன் இடக்கையால் தன் திருப்பாதங்களை ஐயப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

ஐயப்பன் கால்களை இணைக்கும் பட்டை சிவ, விஷ்ணு ஐக்கியத்தைக் காட்டுவதாகும். அர்த்தநாரீ மூர்த்தத்தில் அம்பிகைக்கு அளித்து உடலில் பாதி பாகத்தை கேசவார்த்த மூர்த்தத்தில் விஷ்ணு பெற்றிருக்கிறார்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.