கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை…

0 29

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

பெரிய பாதை சிறிய பாதை

கேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது. இதில் பம்பைவரை பஸ் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.

பெரிய பாதையில் நடக்க முடியாதவர்கள் பம்பைவரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நீலிமலை வரை ஏறி சன்னிதானத்துக்குச் செல்லலாம். இது சிறிய பாதை எனப்படுகிறதுஇது ஏதோ எதுகை, மோனை கோஷம் அல்ல. 48 மைல் பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு இதன் நிதர்சனம் புரியும்.

சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ஐயப்பனைத் தரிசிக்க இரண்டு வழிகளில் பக்தர்கள் செல்கின்றனர். பம்பையில் தொடங்கி சன்னிதானம் வரையிலான ஏழு கிலோமீட்டர் தொலைவு கொண்டது சிறிய பாதை. இதில் நீலிமலை, அப்பாச்சிமேடு என்ற இரண்டு ஏற்றங்கள் சற்றுச் சிரமமாக இருக்கும்.

  முன்பு இந்தப் பாதையும் பாறைகள், மேடு பள்ளங்கள் கொண்டதாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது சிமெண்ட் தளம், படிகள், கைப்பிடிக் கம்பி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் ஏறுவதற்கு அதிகச் சிரமம் இருக்காது. மேலும், வழிநெடுக க்கடைகள் இருப்பதால் சோர்வைப் போக்கிக் கொள்ளலாம்.

ஐயப்பனின் பூங்காவனம் iyyappan poongavanam

எரிமேலியில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரையிலான 48 மைல்கள் (சுமார் 75 கி.மீ.) நடப்பது பெரிய பாதை. அடர்ந்த காடு, மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பாதையில் யாத்திரை மேற்கொள்வது எளிதானதல்ல. எரிமேலியில் இருந்து நடக்கத் தொடங்கினால் பேரூர்தோடுவரை தார்ச்சாலை. அங்கிருந்துதான் ஐயப்பனின் பூங்காவனம் தொடங்குகிறது. சிவன் கோயில் வரையான பாதை சிரமமின்றி இருக்கும். அதன்பிறகு ஒத்தையடிப் பாதையாகச் செல்லும் காட்டு வழிதான்.

காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் இவற்றைக் கடந்து சென்றால் பம்பையை அடையலாம்.

ஐயப்பனின் பூங்காவனத்தில் நுழைந்துவிட்டால் கிழக்கு எது, மேற்கு எது என்பதுகூடத் தெரியாது. காட்டுப்பாதை முழுவதும் ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும். பாறைகள், பாதங்களைப் பதம் பார்க்கும் சிறிய கற்கள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் மரங்களின் வேர்கள், முட்களைப் போலக் குத்தும் மரக் குச்சிகள் எனக் கரடுமுரடான பாதை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பக்தர்கள் சொல்லும் வழிநடை சரணங்கள் காடு முழுவதும் எதிரொலிக்கும்.

ஒத்தையடிப் பாதையையொட்டி கிடுகிடு மலைச் சரிவுகள். கரணம் தப்பினால் அதலபாதாளத்தில் இழுத்துச் சென்றுவிடும். இவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் ஐயனே நம்மை வழிநடத்திச் செல்வதால் காட்டுப்பாதையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதில்லை.

 –  சபரிமலை யாத்திரை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.