ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்

14

வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

சப்தஸதி பாராயணத்துடன் சகஸ்ரசண்டி மகாயாகம்.

 இராகுகேது பெயர்ச்சி, ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம் முன்னிட்டு 26.07.2017 முதல் 30.07.2017 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

 

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்

   உலக மக்கள்  அனைவரும்  ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள்  ஏற்படாமல் இருக்கவும்  நல்ல மழை பெய்து  விவசாயம் செழிக்க வேண்டியும்  என்ற வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம்  என அழைக்கப்படும்  சகஸ்ர சண்டி ஹோமத்துடன் ஸப்த சதி சண்டி பாராயணமும்நடைபெறுகிறது.

 26.07-2017 தேதி ஆடி மாதம் 10ம் தேதி புதன் கிழமை, ஆடி பூரம், திருவோண நட்சத்திரம் சதுர்த்தி கூடிய சுபதினத்தில்  மாலை  4.30  மணிமுதல்  கோ பூஜை  விக்னேஸ்வர பூஜை, சண்டி தேவி கலச பூஜையுடன்  தீப சண்டி பாராயணத்துடன்  துவங்க உள்ளது.

27.07.2017 தேதி  ஆடி மாதம் 11ம் தேதி வியாழன் காலை  6.30 மணிமுதல் எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றிபெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளை பெறவும் இராகு கேது பெயர்ச்சி யாகம்,  நவக்கிரக ஹோமம், மகா தன்வந்திரிஹோமம்,மஹா சுதர்சனம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்குசண்டி ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை நடைபெறுகிறது.

28.07.2017 தேதி ஆடி மாதம் 12ம்   வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்த காரியங்கள்நடைபெறவும், 26 வகையான செல்வங்கள் கிடைக்கவும், குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும் கலந்து கொள்ளும்புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி பெண்களுக்கு  திரு மணம் நடைபெற வேண்டி ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி யாகம், காலபைரவர் ஹோமம் அதை தொடர்ந்து சதுர் சஷ்டி பைரவ பலி  பூஜை  நடைபெறுகிறது.

29.07.2017 தேதி ஆடி மாதம் 13ம் தேதி சனிக் கிழமை காலை  7.30  மணி முதல்  இரவு 8 மணி வரை  ஹோரம்ப  கணபதிஹோமம்,  அதை தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா ஹோமம்  தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு அம்பாளின்  சிறப்பு நிகழ்ச்சிநடைபெறுகிறது. 30.07.2017-ந்தேதி ஆடி மாதம் 14 ந் தேதி ஞாயிற்று கிழமைகாலை 7 மணி முதல்

இரவு 8 மணி வரை  சகல சௌபாக்கியங்கள் வேண்டி வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், தசமஹா வித்யா ஹோமம் . ஸ்ரீசாக்தஉபாசகர்களைக் கொண்டுநடைபெறுகிறது.

 தன்வந்திரி பீடம்  ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி  பக்தர்கள், தன்வந்திரிகுடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும் 5 நாட்களிலும்பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டியாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரியபேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம்ஆண்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன்  சகலஐஸ்வரியம்  பெற்று  இறையருளுடன்ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 5 நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமமும் ஸப்த சதி சண்டிபாராயணமும்  நடைபெறுகிறது  என்றார்.

For Further Details:
Sri Danvantri Arogya Peedam,
8124516666,
9443330203 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.