செல்வம் தரும் திருப்பாற்கடல் ரங்கநாதப்பெருமாள்
வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் என்னும் இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயர் கடல் மகள் நாச்சியாருடன் ரங்கநாதர் என்னும் பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் கல்வியில் மேன்மை பெறவும் மனசஞ்சலத்தில் இருந்து விடுப்படவும் ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இங்கு வேண்டி கொள்கின்றனர். பிராத்தனைகள் நிறைவேறியதும் செவ்வாழை, அத்திப்பழம் மற்றும் நல்லலென்னை இவைகளை தானம் செய்கின்றனர். இங்குள்ள இறைவனின் மூர்த்தம் அத்திமரத்தால் செய்யப்பட்டு இருப்பது இத்தலத்தின் சிறப்பு.
சிவனா என்று வியந்து திருப்பாற்கடல் எனும் இத்தலத்தில் திருமாலின் கிடந்த, நின்ற கோலங்களை ஒரு சேர தரிசிக்கலாம். மகாவிஷ்ணு ‘ஸ்ரீரங்கநாதனாக’ கிடந்த கோலத்தில் பிரம்மாவின் வேண்டுதலுக்கு இணங்க இன்றளவும் காட்சியளிக்கிறார். புண்டரீக மகரிஷி வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை தரிசனம் செய்ய, இக்கோயிலுக்கு வந்தார். ஆனால், இங்கே தூசேஸ்வரர் என்ற ஈசனின் வடிவைக் கண்டார். பெருமாள் ஆலயத்தில் சிவனா என்று வியந்து குழம்பினார். மெல்லிய ஏமாற்றத்தோடு வெளியே வந்தார். அவருடைய அறியாமையை போக்க விரும்பிய திருமால், வயோதிக வடிவில் அவர் முன் தோன்றி, ‘ஏன் கவலையோடு செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
இது திருமால் கோயில்தானே அதற்கு புண்டரீக மகரிஷி, ‘நான் திருமாலை சேவிக்க வந்தால் இங்கு சிவம் நிற்கிறதே’என்று ஏக்கமாகச் சொன்னார். உடனே திருமால், ‘இது திருமால் கோயில்தானே! வாருங்கள், நீங்கள் பார்த்தது பெருமாள்தான் என்று காட்டுகிறேன்,’என்று சொல்லி அழைத்துச் சென்றார். உடனே பளிச்சென்று வயோதிகர் மறைந்தார். வேங்கடநாதராக காட்சியளித்தார். புண்டரீக மகரிஷிக்காக சிவலிங்கத்தின், அது முதல் இது புண்டரீக க்ஷேத்ரம் என்றும், புஷ்கரணி, புண்டரீக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஸ்தல விருட்சம், வத்திருத்தலங்களில் மட்டுமே காணப்படும் வில்வம்! ஆகவே, இங்கு ‘அரியும், சிவனும் ஒன்று,’ என்ற வாக்குக்கு ஏற்ப இறைவன் சிவமாகவும், திருமாலாகவும் ஒருசேர பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர்
அமைவிடம் : வேலூரில் இருந்து திருப்பாற்கடலுக்கு பஸ்வசதி உள்ளது.