சிவனை சான்றோர்க்கு எந்நாளும் நன்நாளே

0 35

திருச்சிற்றம்பலம்
கானே வருமுரண் ஏனம் எய்த
களி ஆர் புளினநற் காளாய் என்னும்
வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே

பொருள் :

 என்மகள் குலாத்தில்லை அம்பலக் கூத்தனை உருவெளித்தோற்றத்தில் கண்டு அவனை நோக்கி `காட்டில் உலவிய வலிய பன்றி மீது அம்பைச் செலுத்திய செருக்குமிகுந்த வேடர் குலத்துச் சிறந்த காளைப்பருவத்தனே! வானத்தை அளவிய நீண்ட சிகரத்தை உடைய பெரிய மகேந்திரமலைமீது இருந்த தேன் போன்ற இனியனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதத்தை ஓதும் செல்வத்தை உடைய தில்லை மூவாயிரவரின் தெய்வத்தலைவனே! குணக்குன்றே!` என்று பலவாறு அழைக்கிறாள்
ஒன்பதாம் திருமுறை
திருவிசைபா-திருப்பல்லாண்டு
திருமாளிகைத் தேவர் அருளிய கோயில் திருப்பதிகம்
பண் – பஞ்சமம்
சிவ சொந்தங்களுக்கு வணக்கம்
சிவனை சிந்தித்தோர்க்கு எந்நாளும் நன்நாளே
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
நமசிவாய

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.