ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் ஈச்சங்கரணை , திருவடிசூலம்

0 533

ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் ஈச்சங்கரணை , திருவடிசூலம் – புண்ணியம் தேடி ஒரு பயணம்
புண்ணியம் தேடிப் போற பயணத்துல போன வாரம் நாம பார்த்தது செங்கல்பட்டில் இருக்கும் கோவிலான “திருவடிசூலம்” அதை ஒட்டி இன்னிக்கு நாம பார்க்கப்போற கோவிலும் செங்கல்பட்டு பக்கத்துல இருக்கும் கோவில்தான்.

 திருவடிசூலம் ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு இடப்புறம் வழியாகவும் இல்லாட்டி சென்னை – செங்கல்பட்டு ஹைவேஸ்ல மறைமலை நகரை தாண்டி இருக்கும் மகேந்திரா சிட்டி வழியா உள்ள போனா, அந்த வழி திருவடிசூலம் கிராமத்துக்கு போய் சேரலாம். இந்த வழி சுற்றிலும் மலையும், பச்சைபசேலென செடி கொடிகள், மரங்கள் சூழ்ந்து அழகாக காட்சியளிக்குது.

சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர் இந்த பைரவர். பரதேசி கோலத்திலும், பன்னிரு கைகளுடனுடனும், நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் ருத்ரமூர்த்தி ரூபமாய்க் காட்சி தருபவர் கால பைரவர். சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்சபூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கருதபடுகிறார்.

ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் ஈச்சங்கரணை , திருவடிசூலம்

இங்குள்ள ஆலயத்துக்கு ஸ்ரீமகா பைரவருத்ர ஆலயம் ன்னு பெயரிடப்பட்டிருக்கு. . இதற்குப் பொருள் ஸ்ரீ என்பது பெண்சக்தியை குறிக்கும். மகா என்றால் பெரியது என்றும், பைரவ என்றால் பயம் அறியாதவர் என்றும்,ருத்ர என்பது சிவ அம்சத்தையும், ஆலயம் என்பது ஆகம விதிகளின் படி உருவாக்கப்பட்ட தலம் என்பதையும் குறிக்கும்.

அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுது. .

கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் உள்ள மலையில் இருந்து கல் எடுத்து பைரவர் சிலை உருவாக்கபட்டதாம். மகாபைரவ ருத்ர ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் சிலையின் உயரம் 5 அடி. சூலம், கட்கம், டமருகம் கொண்டு ஆட்சியும், வரப்பிரசாத குங்குமமும் நான்கு கரங்களில் அமையப் பெற்றது. உடலாக ஆண், பெண் கலை அடங்கியது. கபால உச்சி பிரம்மராட்சஷ செயல் அடங்கியது. அக்னி சடையில் ஆனந்தம் கொண்டதுமாக, சுபிட்சம் கொண்டு இடையில் நாக கிராஷாந்தியும், கத்தி முனை, அரிவாள் கொண்டு சலங்கையோடும், இடது கால் தண்டை மெருகூட்ட, நெற்றியில் சூல பொட்டுடனும் உள்ளார்.

தூரத்தில் இருந்து பார்க்கும் போதே மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சி தருது ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் . கோவில் நடைதிறந்து இருக்கும் நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.