ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம்

0 52

 சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே இந்து மதம் (சனாதன தர்மம்) தோன்றி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. வேத வியாச முனிவரால் இந்து மதம், ரிக், யஜூர், சாம, அதர்வன எனும் நான்கு வேதங்களாக பிரிக்கப்பட்டது. மேற்படி நான்கு வேத விளக்கங்களை, ஸ்ரீசங்கரர், ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்துவாச்சாரியார் ஆகியோர், முறையே, அத்வைதம், வஸிஷ்டாத்வைதம் மற்றும் தத்வைதம் எனப்படும் மூன்று கிரமங்களை ஏற்படுத்தினார்கள். இதில் மூன்றாவதாகத் தோன்றி மத்வாச்சார் கி.பி. 1238 ஆம் ஆண்டு வாயு பகவானின் அவதாரமாகத் தோன்றி த்வைத வேதாந்தத்தை நிர்மாணித்துள்ளார். அவர் கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ண திருவுருவத்தை நிர்மாணம் செய்து அட்ட மடங்களையும் நிர்வகித்து வந்தார். அவருடைய பிரதான சீடர்களில் ஒருவரான, சுமதீந்திர தீர்த்தரின் வழிவழியாக வந்த சீடர்களில் ஸ்ரீராகவேந்திர சுவாமியும் ஒருவர் ஆவார்.

 ஈரோடு மாத்வ மக்களின் விருப்பத்திற்கு இணங்க வேத விற்பன்னர் ஆசாரசீலர் ஈரோடு திரு.ராமாச்சார் என்பவர் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம், மந்திராலயம் சென்று அங்கிருந்து புனித மண் தலையில் சுமந்தவாரே, கால்நடையாக ஊர் ஊராக வந்து பூசைகள் செய்து கொண்டு ஈரோடு கொண்டு வந்து, காவிரிக்கரையில் சாத்திரப்படி சிறிய பிருந்தாவனம் அமைத்து குடமுழுக்கு செய்தார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிய வருகிறது. இந்த பிருந்தாவனம் தமிழ்நாட்டிலேயே, முதலாவதாகவும், பழமையானதாகவும் . இந்தியா முழுவதிலும் உள்ள பிருந்தாவனங்களில் மூன்றாவது ஆகும். ஏற்கனவே ஸ்ரீஆஞ்சநேயர் கோவில் அங்கு பூசைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆஞ்சநேய சுவாமி சன்னதியின் மேல் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிலைகளுடன் கூடிய கலசத்துடன் கூடிய விமானம் அமைந்துள்ளது. முகப்பு வாசலில் மூன்று கலசங்களுடன் கூடிய ஸ்ரீராமர், சீதை, ஆஞ்சநேயர் சிலைகளுடன் கூடிய சிறிய கோபுரம் பரிமள மண்டபத்தின் மேல் 7 கலசத்துடன் கூடிய மகாலட்சுமி சிலையுடன் கோபுரமும் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை.

 ஈரோடு காவிரிக்கரையில் அமைந்துள்ள பழம்பெரும் ஆலயமான அருள்மிகு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன்ம் மிக அழகானதொரு ஆலயமாகும். மந்திராலயத்தில் மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் எடுத்து வந்து ஈரோடு பிருந்தாவனத்தில் நிறுவப்பட்டுள்ளது. ப்தினைந்தாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், ஹோஸபேட்டைக்கு அருகில் வாழ்ந்து வந்த சிறப்பான பிராமண தம்பதிகளான திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்பவருக்கும் ஸ்ரீதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் அருளால் அவதரித்த மகான் ஸ்ரீராகவேந்திரர் ஆவார். இவருடைய இயற்பெயர் வெங்கடபட்டர், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பத்ற்கிணங்க சிறு வயதிலேயே சகல சாத்திரங்களையும் முறைப்படி கற்றுத் தேர்ந்திருந்தார்.. உரிய பருவத்தில் சரசுவதி பாய் என்பவரை மணந்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார

 சில காலம் கும்பகோணத்தில் வசித்து வந்த ஸ்ரீசுதீந்தரரிடம் மாணவராக இருந்து மேலும் பல கலைகளையும் கற்றார். தன் மேன்மையான அறிவினால் மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டு விளங்கினார். இவர் இயற்றிய விளக்க நூலான “சுதா பரிமளம்” மூலம் பரிமளாசிசாரியார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இவருடைய குடும்ப வாழ்க்கை சிரமமானதாகவே இருந்தது. திரும்பவும் ஸ்ரீசுதீந்தரரிடம் சென்று கல்வி கற்க முற்பட்ட போது ஆண்டவன் அருளால் சந்நியாசம் பெற்று ஸ்ரீராகவேந்திரர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மனைவி மனமுடைந்து தஞ்சையில் ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நற்கதி ஏற்படும்படி நம் தவ வலிமையால் அருளினார். இதன் பிறகு பல இடங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்தார்.  தான் சென்ற இடங்களிலெல்லாம் தன் மகிமையால் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். ஆணவமாக செயல்பட்டு அனைவருக்கும் சிரமம் கொடுத்துக் கொண்டிருந்த அதர்ம அரசனை அடக்கியது, கருநாகம் தீண்டிய தன் சீடனை உயிர்பித்தது போன்ற பல சாதனைகள் புரிந்தார்.

 ஒரு சமயம் இவர்தம் மகிமையை சோதிக்க எண்ணிய ஐதராபாத் நவாப் ஒருவர் சுவாமி நைவேத்தியத்திற்காக மூடி வைத்த பாத்திரத்தில் ஆட்டு இறைச்சியை போட்டு வைத்தார். இதனைத் தன் ஞானதிருட்டியால் கண்டுணர்ந்த சுவாமிகள் அந்த இறைச்சியை பழமாக மாற்றியதோடு அந்த நவாப் தானே தன் தவறை உணர்ந்து சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டதோடு அதோனி தாலுக்காவில் உள்ள மந்திராலயம் என்ற கிராமத்தையே இவருக்கு தானமாகக் கொடுத்தார்.

ஆதி காலத்தில் பக்த பிரகலாதன் யாகம் செய்த பூமியாக மந்திராலயம் இருப்பதனால் அங்கேயே தனக்கான பிருந்தாவனத்தையும் தானே நிர்மாணம் செய்து கொள்வது என தீர்மானித்தார். சக 1593, விரோதி கிறித்து வருடம் சிரவண மாதம் கிருஷ்ண பட்சம், துவிதியை குருராயர் கி.பி.1671ம் வருடம் பிருந்தாவன பிரவேசம் செய்வது என்ற சங்கல்ப்பமும் செய்து கொண்டார். அதன்படி தன் தொண்டர்கள் முன்னிலையில் “இந்து எனகே கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இயற்றி , அதை பாடிக்கொண்டும், “நாராயணா” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டும் பிருந்தாவன பிரவேசம் செய்து முக்தி அடைந்தார்.

 ஸ்ரீராகவேந்திரர் பகவத்கீதை, பிரம்ம சூஸ்த்ரபாஷ்யம், உப நிஷத்துகள், வேதங்கள் இவைகளுக்கு ஸ்ரீமத்வாச்சாரியார் செய்த மூல நூல்களுக்கு உறை நடை நூல்கள் எழுதி, பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கங்களும் எழுதினார். அதனை மக்களிடம் பிரச்சாரமும் செய்தார். அவர் இயற்றிய முக்கிய நூல்கள், சுதா பரிமளம், சந்திரிகா பிரகாசா, சந்திர தீபிகா, நியாய முக்தாவளி, ரிக் அர்த்த மஞ்ஜரி, கீதா விவரித்த உபநிசத் கண்டாரித்தம் போன்றவைகளாகும். ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளையும், சுருக்கி, மிக எளிமையாக மக்கள் கற்று பயனடையும் வகையில் சிறிய நூல்களாக அமைத்தார்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.