கல்வி,கேள்வி மற்றும் பொருட்செல்வம் பெருக – ஸ்ரவண சுண்டல்

0 98

ஸ்ரவண விரதம் என்பது மாதத்தில் வரும் திருவோண நக்ஷத்திரத் தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளும் ஒரு விரதம்.இந்த விரதம் இருப்பதால் கல்விச் செல்வம், கேள்விச் செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும். இப்படிப் பட்ட அந்த திருவோண ஸ்ரவண விரதத்தன்று நாம் இறைவனுக்கு நெய்வேதனம் செய்வது வழக்கம்.இந்த சுண்டல் பிரசாதமாக பெருமாளுக்கு படைத்தால் நன்மைகள் நடக்கும்.இப்பொழுது அந்த சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

வேகவைத்த கடலைப் பருப்பு – 200 கிராம்

வெல்லம் – 100 கிராம்

ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை

நெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேகவைத்த கடலைப் பருப்பு,வெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்ப் பொடியை போட்டு கிளறி கெட்டியாக சுண்டல் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த சுண்டலை செய்து திருவோணமாகிய பெருமாள் நக்ஷத்திரத்தன்று இறைவனுக்கு படைத்துப் பலன் பெறலாமே!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.