சித்த தரிசனம் பெற எளிய பயிற்சி முறை!

0 1,432

 சித்தர்களை நாம எல்லோருமே நம்புகின்றோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவர்கள் இருந்ததர்க்கான சான்றுகள் பல உண்டு. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் இன்றும் உதவி செய்கின்றார்கள் என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். சித்தர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டால், நம்முடைய கர்ம வினைகளில் இருந்து விடுபடலாம்…

சித்தர்களை சந்திப்பதென்பது எல்லாறாலும் முடியுமா ?

முயற்ச்சி செய்தால் அவர்களை சந்திக்கலாம்:

 பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர்  பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.

 ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். ஆசனப் பலகை அல்லது , தரையில் – மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் – உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,

ஓம் சிங் ரங் அங் சிங்

 – என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள்.

 நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் – தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் – இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் – உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் , உங்களுக்குமனபலம் கூடும்.
ஒரு சாதாரண செடி வளர்வதே – அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவமும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். இந்த பயிற்சிக்கு நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு தெய்வீக அனுபவம் கிட்டும்…

பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #udupikrishnan #siddha #sidhar

  Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666 

 

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.