சித்தர்கள் மலையில் தவம் செய்ய காரணம் இதுதான்
நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது. அதே போல திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலையும் அங்குள்ள மண்ணும் கல்லும் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது. ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார். திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணா மலையை தரிசித்துள்ளார். அன்னை ஆதிபராசக்திக்கு “விந்தியா சல நிவாசினி” என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும். உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள். ” குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என வழி படப்படுகிறது. பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு இருந்துவருகிறது.
அதற்கு காரணம் என்ன ?
மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும். மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலை கள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும். இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.
மலைகளின் சிறப்பைப் பற்றி அகத்தியர் எழுதியது (புவனகிரி மலை) ;
தூய்மையாய் புவனகிரி வளப்பஞ்சொல்வேன்
துப்புரவாய் புலத்தியனே சுகுணமாரா
வாய்மையாய் தென்காயற் பதிக்குமேற்கே
வளம்பெரிய நாதாககள் கூட்டமப்பா
மாய்மைகள் அதிகமுண்டு மன்னாகேண்மா
மகாபெரிய புவனகிரி மலைதானப்பா
சாய்மையா ரிஷிமுதலோர் சித்தர்கூட்டம்
தவமிருந்து சமாதிமிகக் கொண்டகாடே
காடான காடதுவும் நாதர் காடு
கடுவனமாம் குகையுண்டு சுனையுண்டு
தாடாண்மை கொண்டதொரு கிரிகள்கூட்டம்
தகமையுள்ள புவனகிரி அடிவாரத்தில்
மேடமையாம் வாசலது திட்டுவாகல்
மேன்மையுள்ள சுரங்கம்போல் வழிதான்காணும்
கூடாமை யாரேனும் முட்செல்வார்கள்
குருபரனே அசுவனியார் சொன்னவாக்கே
வாக்கான படியல்லோ நீயுமப்பா
நோக்கமுடன் எந்தனுக்கு தான்கொடுத்த
நுணுக்கமுள்ள சூக்குமம் தானப்பா
பொங்கமுடன் அசுவினியார் தமைநினைத்து
ஆக்கமுடன் செல்கையில் வாசல்காண்பாய்
அப்பனே உத்தமர்க்கு செர்வையாமே
செர்வையாய் குகைக்குள்ளே சுரங்கத்துள்ளே
செங்கமலக் கண்ணானே சென்றபோது
பார்வையா யங்கிருக்கும் காவலாளர்
பார்த்திபனே உமைக்கண்ட போதேவண்ணம்
தேர்வையாம் யாரென்று வினவிக்கேட்பார்
அகத்தியனான் சீடனென்று சொல்வாயே
ஆறவே உனையழைத்து வாசிர் மித்து
அப்பனே உட்காவல் கொள்ளுவாரே
– அகத்தியர்