தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

0 1,478

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன.  துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய  தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..

Kanaka Durga Temple: Deity with Golden Glory

     நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

பகை,பயம் போக்கும் சிம்ம வாகினி தேவி துர்கா

     துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில்.   ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.