அறுபத்து நான்கு பைரவர்களும் அவர்களின் சக்திகளும்

0 127

அறுபத்து நான்கு பைரவர்களும் அவர்களின் சக்திகளும்

 வைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார். வைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. வைரவரை சொர்ணாகர்ஷண வைரவர், யோக வைரவர், ஆதி வைரவர், கால வைரவர், உக்ர வைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.

நட்சத்திரங்களும் பைரவர் அருள் தரும் ஸ்தலங்களும்

 கால வைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால வையிரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படு கிறார்.

பைரவர், வீரபத்திரர் ஆகிய இருவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும் போற்றப்படுகிறார்.

புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம்.

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர் கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும்.

அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

 வைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு வைரவராக தோற்ற மளிக்கின்றார். முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். 64 யோகினிகளே 64 பைரவர்களின் சக்திகளாக மாறினர். 64 பைரவர்களும் அவர்தம் சக்திகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அறுபத்து நான்கு பைரவர்களும் அவர்களின் சக்திகளும்

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.