அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வைக்கும் மந்திரம்!

61

அனைத்து செயல்களிலும் வெற்றி பெற வைக்கும் மந்திரம்!

பொதுவாக அனைவருமே எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் தோல்வியே இருக்க கூடாது என்று நினைப்பார்கள். ஆனாலும் கிரக நிலைகளின் தாக்கம் காரணமாக வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் வரும். இனிமேல், நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால், இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

வெற்றி பெற வைக்கும் மந்திரம்:

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்

த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்

யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே

தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே – நாராயண ஹ்ருதயம்

மந்திரத்தின் பொருள்:

திருமாலே, என்னை காத்து அருள் புரியும் கடவுளே, எனது மனதில் குடிகொண்டிருக்கும் தங்களை வணங்குகிறேன். பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களில் நான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் எனக்கு வெற்றியை அருள் வேண்டுகிறேன் திருமாலே, நமஸ்காரம்.

திருமாலின் இந்த மந்திரத்தை ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாளை மனதில் நினைத்துக் கொண்டு 108 முறை சொல்லி வந்தால், பெருமாளின் அருள் கிடைப்பதோடு நம்மை காத்தருள்வார். அதோடு, நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் நமக்கு வெற்றியை கொடுப்பார்.