அனைத்து தடைகளும் நீங்க சித்தர்கள் அருளிய மந்திரம்!

58

அனைத்து தடைகளும் நீங்க சித்தர்கள் அருளிய மந்திரம்!

எந்த காரியம் எடுத்துக் கொண்டால் பல தடைகள், தாமதங்கள் வரும். ஆனால், அதையும் தாண்டி வெற்றி பெறுவது என்பது சாதாரண காரியமல்ல. திரும்ப திரும்ப முயற்சி செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை உரிய நேரத்தில் முடிக்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு தீர்வு காணும் விதமாக நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் அருளியிருக்கிறார்.

விஷ்ணு பகவான் எடுத்த 10 அவதாரங்களில் 4ஆவது அவதாரம் நரசிம்ம அவதாரம். இந்த அவதாரமே மிகவும் உக்கிரமான அவதாரம். விஷ்ணு பகவான் இந்த அவதாரம் எடுத்ததற்கான முக்கிய நோக்கமே, துர் சக்தியான ஹிரண்யகசிபுவை வதம் செய்வது தான். இதே போன்று வாழ்க்கையில் நாம் வெற்றிபெறுவதற்கு தடையாக இருக்கும் தீய சக்திகளை அழித்து நமக்கு வெற்றி கிடைக்க வழிவகை செய்யக் கூடியவர் நரசிம்மர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நரசிம்மரின் ஸ்லோகத்தை புலிப்பாணி சித்தர் பக்தர்களுக்கு அருளியிருக்கிறார்.

புலிப்பாணி சித்தர் மந்திரம் – 81

பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு

பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்

கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்

குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்

தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்

திரமாக நரசிங்க ராஜா வானை

சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று

சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே

ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க

ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா

இந்த மந்திரத்தை இலட்ச முறை தொடர்ந்து சொல்லி வந்தால், நம்மை சுற்றி உள்ள அனைத்து தீய சக்திகளும் பறந்தோடும் என்பது ஐதீகம். இதே போன்று மற்றொரு மந்திரம்….

புலிப்பாணி சித்தர் மந்திரம் – 82

காணவே ஓம் சர்வாப்தா நாதா

கனிவாக ஓம்படு சுவாஹா வென்று

வானவே லட்சமுரு செபித்துத் தீரு

வளமான தர்ப்பணமும் மோமான்னங்

கோணாமற் பூசையது பெலத்தச் செய்நீ

குணமாகச் சாமமது சித்தியாகும்

நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்

நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே

இந்த மந்திரத்தை இலட்சம் முறை சொல்லி பின்னர் தர்ப்பணம், ஹோமம், அன்னதானம், பூஜை போன்றவற்றை செய்ய வேண்டும். இவற்றை முறையாக செய்தால், ஒரு சாமத்தில் நினைத்த காரியம் வெற்றி பெறுவதற்கான வழி பிறக்கும். அதோடு தீய சக்திகளும் விலகி ஓடும் என்பது ஐதீகம்.