அரச மரத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

206

அரச மரத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

அரச மரத்தை சுற்றி வலம் வரும் போது கீழ்க்காணும் மந்திரத்தை சொல்லி சுற்றி வந்தால் பல மடங்கு பலன் உண்டாகும் என்பது ஐதீகம்.

மூலதோ பிரம்ம ரூபாய

மத்யதோ விஷ்ணு ரூபிணே,

அக்ரத சிவரூபாய

விருகட்ச ராஜா யதே நமஹ;

பொருள் விளக்கம்:

வேர் பகுதியில் பிரம்மா, மத்தியப் பகுதியில் மஹா விஷ்ணு, மேற்பகுதியில் சிவபெருமான் ஆகியோர் எழுந்தருளியிருக்கும் விருட்ச ராஜனான (மரங்களின் அரசனான) அரச மரத்தை நமஸ்கரிக்கிறேன். மரங்களின் அரசன் என்பதால் அரச மரம் என்று அழைக்கப்படும் இந்த மரத்திற்கு வட மொழியில் விருட்ச ராஜன், அஸ்வத்தா, பிப்பலா ஆகிய பெயர்கள் உள்ளன. பிப்பலா என்பதே ஆங்கிலத்தில் பிப்பல் என்றாகியுள்ளது.

கிருஷ்ண பகவான் மரங்களில் தான் அரசமரமாக விளங்குவதாக பகவத் கீதையில் குறிப்பிட்டிருக்கிறார். புத்தர் ஒரு அரச மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்து ஞானம், பெற்றதால் பௌத்த மதத்தினர் இந்த மரத்தை போதி மரம் என்று போற்றுகின்றனர்.

அரச மரத்தை திருமணமான பெண்கள் வலம் வந்து வழிட்டால் அவற்றின் மருத்துவ குணம் கொண்ட காற்றால் மகப்பேற்றிற்கான உடல் ரீதியான தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.