அறிவாற்றல் பெருக தட்சிணாமூர்த்தி 108 போற்றி!

188

தென் திசை கடவுள்: தட்ஷிணாமூர்த்தியின் 108 போற்றி!

தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும், பெறுதல் அல்லது பெற்றுக் கொள்ளுதல் என்று பொருள்படும். அதாவது, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை, அறிவை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது.

சாந்த மூர்த்தி:

இவரை, தென் திசை கடவுள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு சிவன் கோயில்களிலும் கருவறையின் தென் பகுதியில் வெளிப்புறத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருப்பார். பரமகுரு என்றும் அழைக்கப்படுகிறார். மேலும், சாந்த மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.

தட்சிணாமூர்த்தி தனி கோயில்:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் புளியறை என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. இதே போன்று, சிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்திக்கு என்று தனி சன்னதி இருக்கிறது. சென்னையில், பாடி பகுதியில் உள்ள மிகவும் பழமையான கோயிலான திருவல்லீஸ்வரர் (திருவலிதாயம்) கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு என்று தனி சன்னதி இருக்கிறது. ஒவ்வொரு குரு பெயர்ச்சிக்கும் இந்த கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

தட்சிணாமூர்த்தி வேறு பெயர்கள்:

மேதா தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று பல வடிவங்களில் தட்சிணாமூர்த்தி தோற்றமளிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன.

குரு பகவானுக்கு உரிய நாளான ஒவ்வொரு வியாழன் அன்றும் அறிவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர கர்ம வினைகள் அகலும். புண்ணியம் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.

தட்சிணாமூர்த்தி 108 போற்றி:

 1. ஓம் அறிவுருவே போற்றி
 2. ஓம் அபயகரத்தனே போற்றி
 3. ஓம் அகத்துறைபவனே போற்றி
 4. ஓம் அற்புதனே போற்றி
 5. ஓம் அருளாளனே போற்றி
 6. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
 7. ஓம் அடியாரன்பனே போற்றி
 8. ஓம் அழிவிலானே போற்றி
 9. ஓம் அடைக்கலமே போற்றி
 10. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
 11. ஓம் ஆதிபகவனே போற்றி
 12. ஓம் ஆசாரக்காவலே போற்றி
 13. ஓம் ஆக்கியவனே போற்றி
 14. ஓம் ஆன்மீகநாதனே போற்றி
 15. ஓம் ஆழ் நிலையானே போற்றி
 16. ஓம் ஆதாரமே போற்றி
 17. ஓம் ஆனந்த உருவே போற்றி
 18. ஓம் ஆதரிப்பவனே போற்றி
 19. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
 20. ஓம் ஆச்சாரியனே போற்றி
 21. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
 22. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
 23. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
 24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
 25. ஓம் உய்ய வழியே போற்றி
 26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
 27. ஓம் எந்தையே போற்றி
 28. ஓம் எளியோர்க் காவலே போற்றி
 29. ஓம் ஏடேந்தியவனே போற்றி
 30. ஓம் ஏகாந்தனே போற்றி
 31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
 32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
 33. ஓம் கருணைக் கடலே போற்றி
 34. ஓம் கலையரசே போற்றி
 35. ஓம் கங்காதரனே போற்றி
 36. ஓம் கயிலை நாதனே போற்றி
 37. ஓம் குருபரனே போற்றி
 38. ஓம் குண நிதியே போற்றி
 39. ஓம் சச்சிதானந்தமே போற்றி
 40. ஓம் சதா சிவனே போற்றி
 41. ஓம் சாமப் பிரியனே போற்றி
 42. ஓம் சாந்தரூபனே போற்றி
 43. ஓம் சித்தியளிப்பவனே போற்றி
 44. ஓம் சித்தர் குருவே போற்றி
 45. ஓம் சுயம்புவே போற்றி
 46. ஓம் சொற்பதங் கடந்தவனே போற்றி
 47. ஓம் ஞானோப தேசியே போற்றி
 48. ஓம் ஞான நாயகனே போற்றி
 49. ஓம் ஞானமே போற்றி
 50. ஓம் ஞானியே போற்றி
 51. ஓம் தவசீலனே போற்றி
 52. ஓம் தனிப்பொருளே போற்றி
 53. ஓம் திருவுருவே போற்றி
 54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
 55. ஓம் தீரனே போற்றி
 56. ஓம் தீதழிப்பவனே போற்றி
 57. ஓம் துணையே போற்றி
 58. ஓம் தூயவனே போற்றி
 59. ஓம் தேவாதி தேவனே போற்றி
 60. ஓம் தேவருமறியாசிவனே போற்றி
 61. ஓம் நல்யாக இலக்கே போற்றி
 62. ஓம் நன்னெறிக் காவலே போற்றி
 63. ஓம் நான்மறைப் பொருளே போற்றி
 64. ஓம் நாகப் புரியோனே போற்றி
 65. ஓம் நிலவணியானே போற்றி
 66. ஓம் நிறைந்தவனே போற்றி
 67. ஓம் நிலமனே போற்றி
 68. ஓம் நீறணிந்தவனே போற்றி
 69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
 70. ஓம் நோய்தீர்ப்பவனே போற்றி
 71. ஓம் பசுபதியே போற்றி
 72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
 73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
 74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
 75. ஓம் பேறளிப்பவனே போற்றி
 76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
 77. ஓம் பொன்னம்பலனே போற்றி
 78. ஓம் போற்றப்படுவனே போற்றி
 79. ஓம் மறை கடந்தவனே போற்றி
 80. ஓம் மறையாப் பொருளே போற்றி
 81. ஓம் மஹேசுவரனே போற்றி
 82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
 83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
 84. ஓம் மாமுனியே போற்றி
 85. ஓம் மீட்பவனே போற்றி
 86. ஓம் முனீஸ்வரனே போற்றி
 87. ஓம் முக்கண்ணனே போற்றி
 88. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
 89. ஓம் முக்தியளிப்பவனே போற்றி
 90. ஓம் முடிவிலானே போற்றி
 91. ஓம் முன்னவனே போற்றி
 92. ஓம் மூர்த்தியே போற்றி
 93. ஓம் மூலப்பொருளே போற்றி
 94. ஓம் மோன சக்தியே போற்றி
 95. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
 96. ஓம் மௌன உபதேசியே போற்றி
 97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
 98. ஓம் யோக தட்சணாமூர்த்தியே போற்றி
 99. ஓம் யோக நாயகனே போற்றி
 100. ஓம் யம பயம் அழிப்பவனே போற்றி
 101. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
 102. ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
 103. ஓம் வினையறுப்பவனே போற்றி
 104. ஓம் விரிசடையனே போற்றி
 105. ஓம் விஸ்வரூபனே போற்றி
 106. ஓம் வில்லவப் பிரியனே போற்றி
 107. ஓம் வித்தகனே போற்றி
 108. ஓம் தட்சணாமூர்த்தியே போற்றி போற்றி!