ஆடி கிருத்திகை: நட்சத்திர காயத்ரி மந்திரம்!

99

ஆடி கிருத்திகை: நட்சத்திர காயத்ரி மந்திரம்!

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரங்களில் முருகனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் வரும் ஆடி கிருத்திகை தான். வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துன்பங்கள், பிரச்சனைகள் நீங்க ஆடி கிருத்திகை நாளில் முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு. இவ்வளவு ஏன், திருமணத்திற்கு நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வேலை தேடுவோருக்கும், கை நிறைய சம்பளத்தில் பதவி உயர்வு பெறவும் இந்த ஆடி கிருத்திகை நாளில் முருகனை மனமுருகி வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

விஷாக நட்சத்திரத்தில் தான் முருகன் பிறந்தார். எனினும், முருகனை பாலூட்டி, சீராட்டி வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களும், கார்த்திகை நட்சத்திரமாக மாறிய நாளை ஆடி கிருத்திகை நாளாக கொண்டாடுகிறார்கள். முருகப் பெருமானுக்கு திதி உகந்தது என்றால் அது சஷ்டி. கிழமையில் உகந்தது வெள்ளி. ஆனால், நட்சத்திரத்தில் உகந்தது என்றால் அது கிருத்திகை தான். அதுவும் ஆடி கிருத்திகை இன்னும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆடி மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்து 6 மாதங்கள் வரை கார்த்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கார்த்திகையில் இந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் கை மேல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

மந்திரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அது காயத்ரி மந்திரம். அப்படிப்பட்ட காயத்ரி மந்திரத்தை ஆடி கிருத்திகையான இன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அவர்களுக்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரத்தை உச்சரித்து முருகனை வழிபட்டு வர நினைத்த்து நிறைவேறும்.

நட்சத்திர காயத்ரி மந்திரம்:

  1. அஸ்வினி:

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே

சுதாகராயை தீமஹி

தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

2. பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே

தண்டதராயை தீமஹி

தன்னோ பரணி ப்ரசோதயாத்

3. கார்த்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

மஹாதபாயை தீமஹி

தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4. ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே

விச்வரூபாயை தீமஹி

தன்னோ ரோஹிணி ப்ரசோதயாத்

5. மிருகசீரிஷம்

ஓம் சசிசேகராய வித்மஹே

மஹாராஜாய தீமஹி

தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

6. திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே

பசும்தநாய தீமஹி

தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

7. புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே

அதிதிபுத்ராய த தீமஹி

தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

8.பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே

மஹா திஷ்யாய தீமஹி

தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

9.ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே

மஹா ரோசனாய தீமஹி

தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

10.மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே

பித்ரியா தேவாய தீமஹி

தன்னோ மக ப்ரசோதயாத்

11. பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே

பசுதேஹாய தீமஹி

தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

12. உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே

மஹாச்ரேஷ்டாயை தீமஹி

தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

13. ஹஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே

ப்ரக்ருப்ணீதாயை தீமஹி

தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

14. சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே

ப்ரஜாரூபாயை தீமஹி

தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

15. சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே

மகாநிஷ்டாயை தீமஹி

தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

16. விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே

மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி

தன்னோ விசாகா ப்ரசோதயாத்

17. அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே

மஹா மித்ராய தீமஹி

தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

18. கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே

மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி

தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

19. மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே

மஹப்ராஜையை தீமஹி

தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

20. பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே

மஹாபிஜிதாயை தீமஹி

தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

21. உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே

மஹா ஷாடாய தீமஹி

தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

22. திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே

புண்யஸ்லோகாய தீமஹி

தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

23. அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே

வசூபரீதாய தீமஹி

தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

24. சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே

வருண தேஹா தீமஹி

தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

25. பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே

அஜஏகபாதாய தீமஹி

தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

26. உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே

ப்ரதிஷ்டாபநாய தீமஹி

தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோத யாத்

27. ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே

பூஷ்ண தேஹாய தீமஹி

தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்