ஆணிற்கு திருமணமாக சொல்ல வேண்டிய துதி!

82

ஆணிற்கு திருமணமாக சொல்ல வேண்டிய துதி!

வாழையடி வாழையாக நமது சந்ததியை தலைமுறையை வளர்க்கும் ஒரு விசேஷம், சாஸ்திரம் தான் திருமணம். திருமணம் என்பது ஆணுக்கு பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் வகுக்கப்பட்டுள்ளது. வயது ஆனாலும் இதுவரையில் திருமணமாகாத ஆணும், பெண்ணும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில், ஆணிற்கு விரைவில் திருமணமாக சொல்ல வேண்டிய துதி…

திருமணமாக சொல்ல வேண்டிய துதி:

கந்தர்வராஜோ விஸ்வாவஸு

மமாபிலிஷித கன்யாம் ப்ரயச்ச ஸ்வாஹா

துதி பொருள்:

கந்தர்வர்களுக்கு எல்லாம் அரசனான விஸ்வாவஸூவே, எனது மனதிற்கு பிடித்த கன்னிப் பெண்ணை எனக்கு மனைவியாக தந்து அருள் புரிய வேண்டும். இந்த துதியை ஒரு மண்டலம் 48 நாட்கள் வரை முழு நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் நல்ல மணமகள் கிடைத்து திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

எப்போதும், மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள் கந்தர்வர்கள். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆடல் கலையில் வல்லவராக கருதப்படுகின்றனர்.