ஆணுக்கு திருமணம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

33

ஆணுக்கு திருமணம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர், ஏழு கழுதை வயதாகிறது இன்னும் கல்யாணம் ஆகல என்றெல்லாம் சொல்வார்கள். வாழையடி வாழையாக நமது சந்ததியை தலைமுறையை வளர்க்கும் ஒரு விசேஷம், சாஸ்திரம் தான் திருமணம். திருமணம் என்பது ஆணுக்கு பெண் துணை என்றும், பெண்ணுக்கு ஆண் பாதுகாப்பு என்றும் வகுக்கப்பட்டுள்ளது. கை நிறைய சம்பாத்திக்கிறான். ஆனால், பெண் அமையவில்லை என்று வருத்தப்படும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களது கவலைகள் தீர, அவரது ஆண் பிள்ளைகள் சொல்ல வேண்டிய மந்திரம் இதோ…

ஆணுக்கு திருமணம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

மந்திரம்: 1

விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்

ரூபம் தேஹி ஜயம் தேஹி

யசோ தேஹி த்வி – ஷா ஜஹி

மந்திரம்: 2

பத்னீம் மனோரமாம் தேஹி

மானோவ்ருத்தனு ஸாரீனீம்

தாரினீம் துர்கஸம்ஸார

ஸாகரஸய குலோத்பவாம்.

மந்திரம்: 3

விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்

ரூபம் தேஹி ஜயம் தேஹி

யசோதேஹி த்விஷா ஜஹி

தினந்தோறும் குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி விட்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.