ஆபத்து வராமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்!

98

ஆபத்து வராமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்!

சிலரது குல தெய்வமாகவும், கிராமப்புறங்களில் காவல் தெய்வமாகவும் இருப்பவர் முனீஸ்வரன். சிவனின் அம்சமாகவும் விளங்கும் முனீஸ்வரனை வழிபாடு செய்தால் எந்த ஆபத்தும் நேராது என்பது நம்பிக்கை. முனீஸ்வரனை வழிபடும் போது இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல அற்புத பலன்களை பெறலாம்.

முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ முனீஸ்வர ப்ரசோதயாத்.

பொருள்: எங்களையும், எங்களது குலத்தையும் காத்தருளும் முனீஸ்வரரே.. உங்களை மனமுருகி வழிபடுவதன் பயனாக எனக்கு நல்லாசி புரிய வேண்டுகிறேன்.

முனீஸ்வரனை வழிபடும் போது இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை சொல்லி வந்தால் எந்த ஆபத்தும் நமக்கு நேராது. அதோடு, நமக்கு தைரியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.