ஆயிரம் கை கார்த்தவீர்யார்ஜூனர் மந்திரம்!

150

ஆயிரம் கையுடையான் கார்த்தவீர்யார்ஜூனர் மந்திரம்!

திருடு போன பொருள் திரும்ப கிடைக்க கார்த்தவீர்யார்ஜூனர் வழிபாடு செய்ய வேண்டும். அத்ரி முனிவரின் புதல்வரான ஸ்ரீ தத்தாத்ரேயரின் சீடர் தான் இந்த கார்த்தவீர்யாஜூனர். இவர், அத்ரி முனிவரிடம் அனைத்து வித்தைகளையும் கற்று, மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கி ஸ்ரீ கார்த்தவீர்யன் அரசராக அவதரித்தார்.

கார்த்தவீர்யார்ஜூனரை, ஆயிரம் கையுடையான் என்றும், ஷத்ரீய மாமன்னர் என்றும், ராஜ ராஜேஸ்வரன் என்றும், பரசுராமரிடம் போரிட்டு தோல்வி அடைந்தவர் என்றும், மகாராஜா என்றும் அழைக்கின்றனர். ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் பச்சைக் கல்லில் 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

மேலும் படிக்க: திருடு போன பொருளுக்கு கார்த்தவீர்யார்ஜூனர் பரிகாரம்!

அதோடு, 16 திருக்கரங்களில் 16 விதமான ஆயுதங்களுடன் பார்த்தசாரதி பெருமாள் போன்று மீசையுடன், சங்கு சக்கரத் தாரியாக 16 செல்வங்களும் கிடைக்கப் பெறும் வகையில் நின்று கொண்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அருள் பாலிக்கிறார்.

தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்கும் மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ரோம் கார்த்த வீர்யார்ஜுனாய நம

கார்த்த வீர்யார்ஜுனோ ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்

தஸ்ய ஸ்மரந மாத்ரேன கதம் நஷ்டம் ச லப்யதே

ஸ்ரீ கார்த்தவீர்யர் காயத்ரீ மந்திரம்:

ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே

மஹாசூஷ்மாய தீமஹி

தந்நோஸ்ர்ஜுநஹ் ப்ரசோதயாத்!